இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
Contact us : oorkodangi@gmail.com
சர்வதேச விண்வெளி நிலையத்தை தற்போது சுற்றுலா தலமாக்க தீவிர
நிலையில், நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் ஈடுபட்டுள்ளது. இதற்காக ஸ்பேஸ் எக்ஸ்
உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து சுற்றுலா தலமாக்கவும் இதனை விரிவுபடுத்தும்
முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
நாசா விண்வெளி மையம்.
சர்வதேச விண்வெளி மையம் சுற்றுலாதலமாகிறது: ஒரு இரவு கட்டணம்
இவ்வளவு? ஒரு நாள் இரவு தங்க செலவு மட்டும் இவ்வளவு ஆகுமாம். இந்த விண்வெளி
மையத்தை சுற்றுலாதலமாக்குவதே இதன் தனிச்சிறப்பாகும்.
சர்வதேச
விண்வெளி நிலையம்:
விண்வெளியில், பூமிக்கு மேலே பூமியைச் சுற்றிக்கொண்டே
இருக்கும் ஒரு ஆய்வு நிலையம் சர்வதேச விண்வெளி நிலையம் (International Space
Station) ஆகும். இதனை நாம் நமது வெறும் கண்ணல்கூட பார்க்கலாம். இந்த நிலையத்தை
1998ஆம் ஆண்டில் விண்வெளியில் கட்டத் தொடங்கினர்.
சுற்றி
வருகின்றது:
தற்போது இந்த நிலையத்தின் நீளம் 239 அடி, அகலம் 356 அடி, உயரம்
66 அடி ஆகும். இதன் பொருள் திணிவு 4,50,000 கிலோ. இது பூமியை நீள் வட்டப்பாதையில்
மணிக்குச் சராசரியாக 27600 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது.
பூமியிலிருந்து 278 முதல் 460 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி
வருகிறது. ஒருமுறை பூமியைச் சுற்றி வர 91 நிமிடங்கள் ஆகின்றன. சூரிய உதயம்: சூரிய
உதயம்: தினமும் இந்த நிலையம் பூமியை 15.7 முறை சுற்றி வருகிறது. இந்த நிலையத்தில்
தங்கும் விண்வெளி வீரர்கள் தினமும் 16 சூரியன் உதயத்தையும், மறைதலையும்
காண்கின்றனர்.
இந்த நிலையத்திற்கு ஆய்வு செய்வதற்காக 2000ஆம் ஆண்டுமுதல்
வீரர்கள் சென்று தங்கி வருகின்றனர். இதுவரை 15 நாடுகளுக்கும் மேற்பட்ட விண்வெளி
வீரர்கள் அங்குச் சென்று ஆய்வுகளை நடத்தி விட்டுத் திரும்பி வந்துள்ளனர்.
நிரந்தரமாக அதில் வீரர்கள் உள்ளனர்.
கீழே இறங்கும் நிலையம்:
இந்த விண்வெளி நிலையம்
பூமியின் ஈர்ப்பு ஆற்றலின் காரணமாக மாதம் 2 கிலோ மீட்டர் பூமியை நோக்கி
இறங்குகிறது.
அதனை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்தி விடுகின்றனர். இது ஒரு
தொடர் நடவடிக்கையாக உள்ளது. விண்வெளியில் இயங்கும் மிகப் பெரிய ஆய்வுக்கூடமாக
விளங்கி வருகிறது.
சுற்றுலா
தளமாகிறது:
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சுற்றுலாத் தலமாக்க அமெரிக்க
விண்வெளி ஆய்வு மையமான நாசா முடிவு செய்துள்ளது.இதுகுறித்த பல்வேறு
நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றது. இதுகுறித்து அமெரிக்காவின் கொள்ளைகள்
முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
ஸ்பேஸ்
எக்ஸ் உடன் இணைகிறது:
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் தலைமை
பொருளாதார அதிகாரி ஜெஃப் டிவிட், வணிகப் பயன்பாட்டிற்காக சர்வதேச விண்வெளி
மையத்தில் சுற்றுலாவைத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்தார். ஏற்கனவே ஸ்பேஸ் எக்ஸ்
உள்ளிட்ட நிறுவனங்கள் விண்வெளிச் சுற்றுலாவை நடத்தி வரும் நிலையில், அவர்களுடன்
இணைந்து செயல்பட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு நாள் இரவு தங்க கட்டணம்:
சர்வதேச விண்வெளி மையத்தில் ஒரு இரவு தங்குவதற்கு 35 ஆயிரம்
அமெரிக்க டாலர்கள் கட்டணமாக இருக்கும் என்று தெரிவித்த ஜெஃப் டிவிட், முழு
சுற்றுலாவிற்கு கிட்டத்தட்ட 58 ஆயிரம் டாலர்கள் கட்டணமாக
நிர்ணயிக்கப்பட்டுள்ளாகவும் கூறியுள்ளார்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக