Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 14 ஜூன், 2019

சில முதலுதவிகள்

Image result for சில முதலுதவிகள் 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com

சாதாரண தலைவலிக்கு செய்ய வேண்டிய முதல் உதவிகள் சில:-
1. பாராசிட்டமால், புரூஃபன் மாத்திரைகளில் ஒன்றைப் பயன்படுத்தி, போதிய ஓய்வெடுத்துக் கொண்டால் சாதாரண தலைவலி சரியாகிவிடும்.
2. இது தவிர, தலையைச் சிறிது நேரம் அழுத்திக் கொடுக்கலாம். ‘டிங்சர் பென்சாயின்‘ சொட்டு மருந்தைப் பயன்படுத்தி நீராவி பிடிக்கலாம்.
3. இளஞ்சூடான தண்ணீரில் துணியை நனைத்து ஒத்தடம் தரலாம்.
4. வலிநிவாரணி தைலங்களை நெற்றியில் தடவலாம்.
மழைக் காலங்களில் சில முதலுதவிகள்:-
மழைக் காலங்களில், நோய்களிடம் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள செய்ய வேண்டியவைகள்
முதலில் காய்ச்சலைத் தடுக்க சில யோசனைகள்:-
1. முதலில் சுயசுத்தம் பேண வேண்டும்.
2. சுத்தமான குடி நீரைக் குடிக்க வேண்டும் அல்லது காய்ச்சி ஆற வைத்த தண்ணீரைக் குடிக்க வேண்டும். அத்துடன் சுற்றுப்புற சுகாதாரத்தை காக்க வேண்டும்.
3. சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவது முக்கியம். அதிலும், ஈக்கள் மொய்த்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
4. (மேற்கண்டவை தவிர தேவைப்பட்டால்) தடுப்பூசிகளை முறைப்படி போட்டுக் கொள்ள வேண்டும்.
அடிப்படை காய்ச்சலுக்கான சில முதலுதவிகள்:-
1. காய்ச்சலைக் குறைக்க ‘பாராசிட்டமால்’ மாத்திரையைச் சாப்பிடலாம்.
2. காய்ச்சல் அதிகமாக இருந்தால், பஞ்சு அல்லது பருத்தியிலான துண்டு ஒன்றை சாதாரணத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து கொண்டு நோயாளியின் நெற்றி, மார்பு, வயிறு, அக்குள், தொடை முதலிய இடங்களில் விரிக்க வேண்டும். துணி உலர்ந்ததும் மீண்டும் அதைத் தண்ணீரில் நனைத்து உடலில் விரிக்க வேண்டும். இப்படிச் செய்தால் அரை மணி நேரத்தில் காய்ச்சல் குறைந்து விடும்.
3. எனினும், காய்ச்சலுக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். அதற்கு மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது.
4. மேற்கண்டவை தவிர மழைக்காலத்தில் வரும் டெங்குவைத் தடுக்க வேண்டுமென்றால் கொசு கடிப்பதைத் தடுக்க வேண்டும். அதற்கு ‘டை எதில் டாலுவாமைடு’ அல்லது ‘டை எதில் பென்சாமைடு’ எனும் மருந்து உள்ள களிம்பை பகல் மற்றும் இரவில் உடலில் பூசிக் கொண்டால் கொசு கடிக்காது. (சிலர் வீட்டில் வேப்பெண்ணெய் விளக்கை ஏற்றி வைப்பார்கள். அதனாலும் கொசு வராது)
5. கொசுக்கள் பெருகுவதைத் தடுக்க வீட்டிலும் வீட்டைச் சுற்றியும் நீர் தேங்க அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். கொசுக்கள் சாக்கடை தொட்டியில் மட்டும் அல்ல சில கொசுக்கள் நன்னீரிலும் முட்டை இடும். அதனால் நல்ல தண்ணீரை எப்போதும் மூடி வைப்பது நல்லது. வீட்டை சுற்றி இருக்கும் தேவையற்ற செடி, கொடி புதர்கள் என இவை அனைத்தையும் அவ்வப்போது அழிக்க வேண்டும்.
6. குழந்தைகளுக்கு உடல் முழுவதும் மூடக்கூடிய முழுக்கை ஆடைகளை அணிவிப்பது நல்லது.
வயிற்றுப் போக்கிற்கு செய்ய வேண்டிய முதலுதவிகள் சில:-
மழைக் காலங்களில் வயிற்றுப் போக்கு என்பது கிராமப் புறப் பகுதிகளில் சர்வ சாதாரணம். அதிலும் மாறி வரும் பருவ நிலை காரணத்தால் மழைக்காலம் இன்னதென்று தற்காலங்களில் யாராலும் குறிப்பிட்டு ஒரு காலத்தை சொல்ல முடியவில்லை. வெயில் காலங்களில் மழையையும், மழைக் காலங்களில் வெயிலையும் சர்வ சாதாரணமாகப் பார்க்கிறோம். இந்நிலையில் தேங்கும் தண்ணீராலும் மாசு மட்ட நீரினாலும் வயிற்றுப் போக்கு சர்வ சாதாரணமாக பிறந்த குழந்தைகள் முதல் வளரும் பிள்ளைகள் வரை அனைவரையும் பாதிக்கிறது. இதனைத் தடுக்க சில வழி முறைகளை இந்தப் பகுதியில் காண்போம்.
வயிற்றுப்போக்கைத் தடுக்கும் சில வழிமுறைகள்:-
1. சாப்பிடும் முன்பும் பின்பும் கைகளை நன்றாக சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.
2. தண்ணீரை லேசாக சூடாக்கிக் குடிப்பது பாதுகாப்பு தராது. குறைந்தது 10 நிமிடம் கொதிக்க வைத்து, ஆற வைத்துக் குடிப்பது நல்லது.
3. குடிநீர் பாத்திரங்களையும் சமைத்த உணவுகளையும் ஈக்கள் மொய்க்காமல் மூடி வைக்க வேண்டும்.
4. தேவைப்பட்டால் காலரா போன்ற நோய்கள் பரவாமல் இருக்க தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
5. தெருக்களில் மலம் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும். (கிராமப் புறங்களில் மட்டும் அல்ல நகர் புறங்களிலும் குறிப்பாக குடிசைப் பகுதியில் இந்த விழிப்புணர்வு யாருக்குமே இல்லை என்பது வேதனைக்குரியது)
சரி, ஒருவேளை வயிற்றுப் போக்கு ஏற்பட்டு விட்டால் என்னென்ன செய்யலாம். வாருங்கள் பார்ப்போம்.
சுத்தமான குடிநீரை அடிக்கடி குடிக்க வேண்டும் அல்லது ‘எலெக்ட்ரால்’ பவுடர்களில் ஒன்றைக் குடிக்கலாம்.
கொதிக்க வைத்து ஆற வைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் சர்க்கரையையும் 5 கிராம் சமையல் உப்பையும் கலந்துகொள்ளவும். இதை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 50 மிலி அளவு குடிக்க வேண்டும். இது தவிர, இளநீர், எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் உப்பு சோடா குடிக்கலாம்.
வெயில் காலத்தில் ஏற்படும் கண்நோய்யை தடுக்க சில வழிமுறைகள்:-
மெட்ராஸ் ஐ என்ற பெயரில் அழைக்கப்படும் கண் நோயை அறியாதவர்களும், வாழ்க்கையில் இதனை ஒரு முறையேனும் சந்திக்காதவர்களும் இருந்தது இல்லை. இதனை ஏன் ‘மெட்ராஸ் ஐ’ என்கின்றனர் என்பதற்கு சரியான காரணம் இல்லை. எனினும், அது இவ்விடத்திற்கு அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். வாருங்கள் ‘மெட்ராஸ் ஐ’ என்னும் கண் நோய் வந்து விட்டால் செய்ய வேண்டியவை வருமாறு.
1. கண்நோய் வந்தவர், வீட்டில் உள்ள மற்றவர்களிடமிருந்து தள்ளியே இருப்பது நல்லது.
2. கண்ணை அடிக்கடி கசக்கக் கூடாது.
3. கைகளை அவ்வப்போது சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.
4. நோயுள்ளவர் பயன்படுத்திய கைக்குட்டை, துண்டு, சோப்பு, தலையணை, பற்பசை போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக