இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Join our Whatsapp Group
ஒரு காலத்தில் பவன் என்று சைவ ஓட்டல்களுக்கு பெயர் வைத்தால் பெரிதாய் கல்லா
கட்டலாம் என்று நினைத்து ஏகப்பட்ட பவன்கள் திறந்தார்கள். அதில் தரமானது
மட்டுமே நிலைத்திருக்க மற்றவை வழக்கம் போல. அது போலத்தான் மெஸ் எனும் தாரக
மந்திரத்தை தற்போது யார் வேண்டுமானாலும் வைத்து பணம் பண்ண
பார்க்கிறார்கள். ஆனால் இங்கேயும் அதே விஷயம் தான் தரமும் பணமும் மட்டுமே
மெஸ்ஸின் எதிர்காலத்தை நிர்ணையிக்கிறது. அந்த வகையில் சமீபத்தில்
வளசரவாக்கத்தில் ’கும்பகோணம் சுப்பையா மெஸ்” என்ற பெயர் பலகை என் ஆர்வத்தை
தூண்டியது.
முழுக்க முழுக்க சைவ மெஸ். காலையில் பேக்கேஜாய் பூரி, பொங்கல், இட்லி, வடை,
கல்தோசை என வரிசைக்கட்டி டிபன் வகைகள். இரண்டு இட்லி, ஒரு வடை, ஒரு பூரி,
கொஞ்சம் பொங்கல் இது 45 ரூபாய்க்கு மினி டிபனும், மதியம் 60 ரூபாய்க்கு
அட்டகாசமான அன்லிமிடெட் மீல்ஸ். ஒரு கூட்டு, பொரியல், அப்பளம், சாம்பார்,
ரசம், காரக்குழம்பும், மோர் என சுவையான சாப்பாடு. அதுவும் ஏசி ஹாலில்.
பொரியல் வகைகள் நாளுக்கு நாள் மாறுகிறது.
வெஜிட்டேரியன் சாப்பாடு அதுவும் மெஸ்களில் அத்தனை சிலாக்கியமாய்
இருப்பதில்லை. அப்படியே இருந்தால் வெஜிட்டேரியன் சாப்பாடு நூறுக்கு
குறைவில்லாமல் போய்விடுகிறது. அந்த வகையில் நல்ல தரமான குழம்புவகைகளுடன்,
வயிற்றைக் கெடுக்காத நல்ல சைவ சாப்பாடு விரும்பிகளுக்கு ஐ ரெக்கமெண்ட்
கும்பகோணம் சுப்பையா மெஸ்
25. வெங்கடேஸ்வரா நகர்
பிருந்தாவன் நகர் 2வதுதெரு.
வளசரவாக்கம்.
வளசரவாக்கம்.
சென்னை 87
9585551045
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத
கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என
வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக