இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
ஆவியம், மணியாவியம் என்று சொன்னதுமே, கடந்த கால நினைவுகளை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும்.
சிறுவர்கள் துள்ளிக் குதித்து, விளையாடி மகிழ்ந்து, காலச் சுழற்சியில் காணாமல்போன விளையாட்டுக்களில் ஆற்றல் மிக்க ஆவியம், மணியாவியமும் தான் பச்சைக் குதிரை விளையாட்டு.
சிறுவர்களும், இளைஞர்களும் ஒத்த வயதினரோடு விளையாடும் ஒரு விளையாட்டுதான் இது. இந்த விளையாட்டின் ஆரம்பமே காலை தாண்டுவது தான்.
எத்தனை பேர் விளையாடலாம்?
இரண்டிற்கும் மேற்பட்டோர்
எப்படி விளையாடுவது?
இந்த விளையாட்டை சிறுவர்கள் குழுவாக சேர்ந்து விளையாடலாம்.
விளையாட்டில் முதலில் யார் குதிரை போல் குனிந்து கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்துக்கொள்ள வேண்டும்.
கால் தாண்டுதல் :
ஒருவர் தரையில் காலை நீட்டி குறுக்காக அமர்ந்து கொள்ள வேண்டும்.
விளையாட்டில் பங்குகொள்ளும் மற்ற சிறுவர்கள் நீட்டிய காலில் படாமல் குதித்து தாண்ட வேண்டும்.
அதன்பின்,
கால் மேல் கால்
கால் மேல் கை
கை மேல் கை என அமர்ந்திருப்பவர் உயரத்தை கூட்டிக்கொண்டே போவார்.
இந்த உயரங்களை தாண்டிவிட்டால் அமர்ந்திருப்பவர் எழுந்து குனிந்து நிற்பார்.
ஆள் தாண்டல் :
குனிந்துகொண்டு நிற்பவரை அவர் முதுகில் கையை ஊன்றித் தாண்ட வேண்டும்.
குனிந்து நிற்பவர் முதலில் கால் கட்டைவிரலை பிடித்து நிற்க வேண்டும்.
அதன்பின் கணுக்காலை பிடித்து நிற்க வேண்டும்.
அடுத்து முழங்காலை பிடித்து நிற்க வேண்டும்.
அதற்கடுத்து தொடையை பிடித்து நிற்க வேண்டும்.
கடைசியாக, தாண்டுவதற்கு சிரமமாக கைகளை கட்டிக்கொண்டு அல்லது கும்பிட்டுக்கொண்டு குனிந்து நிற்பார்.
தோற்பவர் :
இதில் யாரால் குறிப்பிட்ட உயரத்தை தாண்ட முடியவில்லையோ அவர் தோற்றவராக கருதப்படுவார்.
அதன்பின் தோற்றவர் தரையில் அமர்ந்து காலை நீட்ட வேண்டும். மறுபடியும் ஆட்டம் இவ்விதம் தொடரும்.
ரகசியம் :
குனிந்து நிற்கப்போகிறவர், ஒரு பூவின் பெயரையோ அல்லது உணவுப் பொருளின் பெயரையோ, உதாரணமாக மல்லிகை, தோசை என யாரிடமாவது சொல்லி வைத்துவிட வேண்டும். ஒரு பூவின் பெயர் அல்லது உணவுப்பொருளின் பெயர் சொல்லப்பட்டுள்ளது என்று மட்டும் பிறருக்கு துப்புக் கொடுத்துவிட வேண்டும்.
இப்போது, அவரை குனியவைத்து, மற்றவர்கள் அவரின் முதுகில் கையை வைத்துத் தாண்ட வேண்டும். தாண்டுபவர், ஏதேனும் பூவின் பெயரைச் சொல்வார். அவர் சொல்வது, குனிந்தவர் ரகசியமாக சொன்ன பூவின் பெயராக இருந்தால், தாண்டியவர் அவுட் ஆகிவிடுவார். இப்போது அவர் குனிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், அடுத்தவர் தாண்டுவார்.
பச்சைக் குதிரை விளையாடுவதால் ஏற்படும் பயன்கள் :
இவ்விளையாட்டு சிறுவர்களின் உடல்திறனை மேம்படுத்த உதவுகிறது.
குதிக்கும் திறன் வளர்கிறது.
உடல் வலிமைப் பெறும்.
எச்சரிக்கை மனப்பான்மை பெருகும்.
இன்றைய நவீன காலத்தில் காலத்தால் மறைந்துபோன விளையாட்டுக்களில் இதுவும் ஒன்றாகும். மேலும், இதுபோன்ற விளையாட்டுகளை விளையாடுவது அரிதாகிவிட்டது.
மொபைல்போனுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கு சமமாக காலத்தால் அழிந்து வரும் கிராமத்து விளையாட்டுகளுக்கும் கொடுக்கலாமே...!!
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக