இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Contact us : oorkodangi@gmail.com
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
உடல்
சக்தியை அதிகரிக்கும் பார்லி சூப்
தேவையான
பொருள்கள்:
கம்பு
ஒரு கப்
பார்லி
இரண்டு கப்
வெங்காயம்
ஒன்று
செலரிக்
கீரை ஒன்று
தக்காளி
ஒன்று
முட்டைக்
கோஸ் சிறிதளவு
உருளை
ஒன்று
கேரட்
ஒன்று
ஓமம்
ஒரு சிட்டிகை
துளசி
ஒரு சிட்டிகை
உப்பு
தேவையான அளவு
மிளகுத்
தூள் தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை
சதுரமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
செலரிக்
கீரையை ஆய்ந்து மண் நீக்கி சிறியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கேரட்,
உருளை, கோஸ் ஆகிய இவற்றையும் நன்கு கழுவி சிறியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
தக்காளியை
நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
முதலில்
கம்பையும், பார்லியையும் தூசு நீக்கி அலசி நன்கு ஊறவைத்துக் கொள்ளவும்.
ஒரு
வாணலியில் வெங்காயம், செலரி, தக்காளி ஆகிய இவற்றையெல்லாம் சேர்த்து நன்கு ஒன்றாக
வதக்கவும்.
மேற்கண்டவற்றை
வதக்கிய பின்னர் மூன்று பங்குத் தண்ணீர் சேர்த்து கம்பையும், பார்லியையும் நன்கு
களைந்து அடுப்பை சிம்மில் வைத்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
ஓரளவு
வெந்தவுடன் உப்பு, மிளகுத் தூள், ஓமம், துளசி ஆகிய இவற்றை எல்லாம் சேர்த்துக்
கிண்டி பாத்திரத்தை மூடி வைக்கவும்.
அவ்வப்போது
மூடியை திறந்து நன்கு கிண்டி விட்டுக் கொள்ளவும். தண்ணீர் வற்றக் கூடாது.
இந்நிலையில் சில நிமிடங்களில் பார்லி நன்றாக வெந்துவிடும்.
இப்போது
அடுப்பை அணைத்து விட்டு பார்லி நன்கு வெந்த மாத்திரத்தில் பாத்திரத்தை இறக்கி அனைவரும் அருந்தலாம்.
சுவையான
பார்லி சூப் தயார்.
உடல்
எடை குறைய விருப்பம் உள்ளவர்கள் இந்த சூப்பை எடுத்துக் கொள்ளலாம்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத
கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என
வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக