Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 18 ஜூன், 2019

எம்பிபிஎஸ் முடித்தவர்களுக்கு ‘நெக்ஸ்ட்’ புதிய தகுதி தேர்வு கட்டாயம்: அடுத்த ஆண்டுமுதல் அமல்படுத்துகிறது மத்திய அரசு ( தேர்ச்சி பெற்றால்தான் டாக்டராக பணியாற்ற முடியும் )


 Image result for எம்பிபிஎஸ் முடித்தவர்களுக்கு ‘நெக்ஸ்ட்’ புதிய தகுதி தேர்வு கட்டாயம்: அடுத்த ஆண்டுமுதல் அமல்படுத்துகிறது மத்திய அரசு ( தேர்ச்சி பெற்றால்தான் டாக்டராக பணியாற்ற முடியும் )


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com 




எம்பிபிஎஸ் முடித்தவர்களுக்கு புதிய தகுதித் தேர்வை அடுத்த ஆண்டு முதல் மத்திய அரசு அமல் படுத்த உள்ளது.இந்தியாவில் இளநிலை மருத் துவப் பட்டப்படிப்பான எம்பிபிஎஸ் ஐந்தரை ஆண்டுகள் கொண்டது. கல்லூரியில் நான்கரை ஆண்டுகள் படித்த பின்னர், ஓராண்டு பயிற்சி டாக்டராக பணியாற்றுகின்றனர்.

இதையடுத்து, மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து டாக்டராக பணியாற்றுகின்றனர். இந்நிலையில், எம்பிபிஎஸ் முடித்த வர்கள் National Exit Test (NEXT) என்ற ‘நெக்ஸ்ட்’ தகுதித் தேர்வை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு இந்த தேர்வை கொண்டு வர முயற்சி செய்த போது, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதனால், அப்போது இந்த தேர்வை மத்திய அரசால் கொண்டுவர முடியவில்லை. தற்போது வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த தேர்வுக்கான மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தின் செயலாளர் டாக்டர் கதிர்வேல், அரசு சாரா சேவை மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் கூறிய தாவது: எம்பிபிஎஸ் முடித்தவர் களுக்கு நெக்ஸ்ட் தேர்வை இந்த ஆண்டு மத்தியஅரசு கொண்டுவர உள்ளது. இந்த ஆண்டு எம்பிபிஎஸ் முடித்தவர்கள் நீட் தேர்வு எழுதி மருத்துவப் பட்டமேற்படிப்புகளில் சேர்ந்துவிட்டதால், அடுத்த ஆண்டு முதல் தான் இந்த தேர்வு நடை முறைப்படுத்தப்படும்.

அதேநேரத்தில் எம்பிபிஎஸ் முடித்தவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு கட்டாயமாக்கப்படுவதால், மருத்துவப் பட்டமேற்படிப்பு களுக்கு அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு இருக்குமா? இல்லையா? அல்லது நெக்ஸ்ட் தேர்வின் மதிப் பெண் நீட் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுமா என்பது இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை. நெக்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து டாக்டராக பணி யாற்ற முடியும். 2017-ம் ஆண்டு இந்த தேர்வை மத்திய அரசு கொண்டுவர முயற்சி செய்த போது நெக்ஸ்ட் தேர்வு, எக்ஸிட் தேர்வு என்று சொல்லப்பட்டது. தற் போது அதே பெயரில் கொண்டு வரப்படுகிறதா அல்லது வேறு பெயர் வைக்கப்படுமா என்று தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

வெளிநாடுகளில் மருத்துவம்

இந்தியாவில் எம்பிபிஎஸ் படிப் பவர்களுக்கு மட்டுமின்றி, வெளி நாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியா வருபவர்களுக்கு எக்ஸிட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுபற்றி லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனத்தின் இயக் குநர் முகமது கனியிடம் கேட்ட போது, “பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மருத் துவம் படித்துவிட்டு இந்தியா வருப வர்கள் இந்திய மருத்துவக் கவுன் சில் நடத்தும் எப்எம்ஜிஇ (FMGE) என்ற தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின்னரே, மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து டாக்டராக பணியாற்ற முடியும்.பின்னர், நீட் தேர்வு எழுதி மருத்துவப் பட்டமேற்படிப்புகள் படிக்க முடியும் என்ற நடைமுறை உள்ளது. நெக்ஸ்ட் தேர்வு நடைமுறைப்படுத்தப்படுவதால், வெளிநாடுகளில்மருத்துவம் படித்துவிட்டு வருபவர்கள் இனிமேல் எப்எம்ஜிஇ தேர்வை எழுதத் தேவையில்லை. நெக்ஸ்ட் தேர்வை மட்டும் எழுதிதேர்ச்சி பெற வேண்டும்” என்றார்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக