இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
என்னதான் மொபைல் போன் மற்றும் கணினியில் விளையாடினாலும் கிராமங்களில் விளையாடுகின்ற விளையாட்டுகளுக்கு அவை இணையாவதில்லை.
தொழில்நுட்பம் நம்மை வசப்படுத்தும் முன்பு நாம் விளையாடிய விளையாட்டுகள் இன்று கனவாகிவிட்டது. வீட்டுத் திண்ணையில் அமர்ந்து விளையாடிய விளையாட்டுகளும், மரத்தின் நிழலில் விளையாடிய விளையாட்டுகளும் இன்று நம் கைக்குள் அடங்கிவிட்டது என்பதுதான் உண்மை.
அப்படி நாம் மறந்த கிராமத்து விளையாட்டான பம்பர விளையாட்டை பற்றி பார்ப்போமா...!
இன்றைய காலக்கட்டத்தில் பம்பரம் விளையாடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது.
பம்பரம் ஒரு சமானப்புள்ளியில் நிலைத்து, அதனைச்சுற்றிய அச்சில் சுழலும் ஒரு விளையாட்டு ஆகும்.
எத்தனை பேர் விளையாடலாம்?
பல பேர்.
விளையாட தேவையானது :
பம்பரம்
ஒரு மீட்டர் நீளமுள்ள சாட்டை (கயிறு).
எப்படி விளையாடுவது?
ஒவ்வொருவரும் கயிற்றையும், பம்பரத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். தரையில் ஒரு சிறிய வட்டத்தை வரைந்து கொள்ள வேண்டும்.
பம்பரத்தின் மீது கயிற்றைச் சுற்றிக் கொள்ளுங்கள். பிறகு அனைவரும் ஒன்றாக பம்பரத்தை சுற்றுங்கள். உடனே கயிற்றை வைத்து பம்பரத்தை மேலே எடுத்து வலது உள்ளங்கையில் விட வேண்டும். இதை கடைசியாக யார் செய்தாரோ அவரே தனது பம்பரத்தை வட்டத்திற்குள் வைக்க வேண்டும். அவரே முதல் போட்டியாளர் ஆவார்.
மற்றவர்கள் வட்டத்திலுள்ள பம்பரத்தை குறி பார்த்து தங்களது பம்பரத்தை வீச வேண்டும்.
பம்பரத்தை வட்டத்திற்குள் விடும்போது வட்டத்திற்குள் தங்களது பம்பரம் சுற்றினால் அதை முதல் போட்டியாளர் அமுக்கி விட்டால், அவரின் பம்பரத்தையும் உள்ளே வைக்க வேண்டும். மேலும், சுற்றாத பம்பரங்களையும் உள்ளே வைக்க வேண்டும்.
மற்றவர்கள் இந்த பம்பரங்களை வட்டத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். யாருடைய பம்பரம் கடைசியாக வட்டத்தில் இருக்கின்றதோ, அந்த பம்பரத்தை வட்டத்திலிருந்து வெளியேற்றி 20 அடி தள்ளி உள்ள வட்டத்திற்குள் சேர்க்க வேண்டும்.
அனைவரும் பம்பரத்தை சுற்ற வைத்துக்கொண்டே அந்த வட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இடையில் யாருடைய பம்பரமாவது சுற்றாமல் போனால் அவருடைய பம்பரத்தை எடுத்துவிட்டு சுற்றாத பம்பரத்தை கீழே வைக்க வேண்டும்.
இரண்டாவது வட்டத்திலிருந்து யாருடைய பம்பரம் வெளியேறுகின்றதோ அவரே விளையாட்டில் தோற்றவர் ஆவார். தோற்றவர் பம்பரத்தில் அனைவரும் அவர்களது பம்பர ஆணியால் குத்து வைப்பார்கள். யாருடைய பம்பரம் கம்மியாக குத்து இருக்கின்றதோ அவரே வெற்றியாளர் ஆவார்.
பயன்கள் :
கைகள் வலுபெறும்.
எச்சரிக்கை திறன் மேம்படும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக