Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 18 ஜூன், 2019

ஆங்கிலத்தில் ஓரெழுத்து ஒரு சொல் (One-letter English words)

Related image  



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com 


தமிழில் "ஓரெழுத்து ஒரு மொழி" என்று நீங்கள் பாடசாலையில் கற்றிருப்பீர்கள். அதாவது "தீ நெருப்பு, "போ" செல், "தை" தை மாதம் போன்ற சொற்கள் ஒரெழுத்து ஒரு சொற்களாகும். ஆனால் ஆங்கிலத்தில் ஓரெழுத்து ஓர் சொல் எத்தனை இருக்கின்றன தெரியுமா?

சரி! இப்பாடத்தில் பார்ப்போம்.

A:
ஒரு அல்லது ஒன்று என்பதை குறிக்கப் பயன்கிறது.
I:
நான் என பயன்படுகிறது.
O:
கவிதையியலில் பயன்படும் ஒரு வியப்பிடைச் சொல்.

குறிப்பு 1: "I" (நான்) எனும் எழுத்தையும், "O" எழுத்தையும் கெப்பிட்டல் எழுத்தில் மட்டுமே எழுதவேண்டும்.

குறிப்பு 2: இலத்தீன் மொழி வழக்கில் "O" எழுத்தை ஒரு வியப்பிடைச் சொல்லாக கவிதையியல் பயன்படுத்தப்படுகின்றது; ஆங்கில மொழி இலத்தின் மொழியையும் தன்னகத்தே கொண்டு உருவான மொழி என்பதால் அப்பயன்பாடே ஆங்கிலத்திலும் காணப்படுகின்றது.

இந்த மூன்று ஓரெழுத்து ஒரு சொல் மட்டுமே ஆங்கிலத்தில் உள்ளன. ஆனால்...


தொழில்நுட்ப பயன்பாட்டில்

இன்றைய தொழில்நுட்ப உலகில் அழைப்பேசி, கணனி, இணையம் போன்றவற்றின் வருகை பல ஓரெழுத்து ஒரு சொற்களை இளம் தலைமுறையினரிடம் தோற்றுவித்துள்ளன. குறிப்பாக குறுஞ்செய்திகள் அனுப்புவதற்கும், இணைய அரட்டையடிப்பதற்கும் பல ஆங்கிலச் சொற்களின் ஒலிப்பை உணர்த்தும் வண்ணம், சொற்களை சுருக்கி ஓரேழுத்து ஒரு சொல் போன்று பயன்படுத்துகின்றனர். இதனை "ஓரெழுத்து ஒரு சொல்" என்று கருதிவிட வேண்டாம். ஆனால் இப்பயன்பாடு இன்று பரவலாக பயன்பாட்டில் தோன்றியுள்ளது. குறிப்பாக இளைய சமுதாயத்தினரிடையே இப்பபயன்பாடு மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. இவற்றில் சில உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களும் தெரிந்துக்கொள்ளும் வகையில் இணையப் பயன்பாட்டில் பொதுவாக அதிகம் பயன்படும் எழுத்துக்கள் மற்றும் அந்த எழுத்துக்கள் குறிக்கும் சொற்கள் இரண்டையும் கீழே பார்ப்போம்.
எடுத்துக்காட்டாக:

T: "take"
C: "care"
C: "see"

"E"
எனும் எழுத்து "he" என்று குறிக்கவும் சிலநேரங்களில் "she" என்று குறிக்கவும் புதியச்சொல்லாக்கமாக பயன்படுத்தப்படுகிறது. "G" எனும் எழுத்து “gangster” என்றும் பயன்படுகிறது. இவற்றைத் தவிர மேலும் பல எழுத்துக்கள் பல சொற்களுக்கு பதிலாக சுருக்கப் பயன்பாடாக புதியச்சொல்லாக்கமாக பயன்படுகின்றன.

எடுத்துக்காட்டாக:

b: “be” or “bee”
c: “sea” or “see”
f: “fat”
g: “Gee”
I: “eye”
j: “jay”
k: “okay”
n: “and”
o: “oh”
p: “pea” (
தாணியம்) or “pee” (to urinate)
q: “cue” or “queue”
r: “are”
t: “tea”
u: “you”
v: “very”
x: (
ஒரு சொற்றொடரின் பகுதியாக பயன்படுகிறது) “x out”
y: “why”

சொற்களை சுருக்கி இலக்கங்களையும் ஓரிலக்கம் ஒரு சொல் போன்று பயன்படுத்தலும் பயன்பாட்டில் காணப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக:

1: “won”
2: “to”, “too”.
நாளை என்பதை சுருக்கமாக இரண்டுடன் "2moro" (tomorrow) என எழுதும் வழக்கும் உள்ளது.
4: “for” –
வாக்கியங்களை சுருக்கி "for" ஒலிப்பை தரும் வகையில் a4d, 4cast, 4m, 4mer, 4milk, 4most, 4t, 4ty நான்கு (4) இலக்கத்தை இட்டு எழுதும் வழக்கும் உள்ளது.

கவனிக்கவும்:

இவை ஓரெழுத்து ஒரு சொற்கள் அல்ல; ஆனால் ஓரெழுத்து ஒரு சொல் போன்று சொற்களை சுருக்கமாக குறுஞ்செய்தி அனுப்புவதற்கும் இணைய அரட்டைகளில் எளிதாக தட்டச்சுவதற்காகவும் பயன்படும் ஒரு தற்கால முறையே ஆகும். இவை காலத்திற்கு ஏற்ப இளம் தலைமுறையினரால் தோற்றமெடுக்கும் புதுச்சொல்லாக்கங்கள் என்றே கூற வேண்டும். நாளை இவை மேலும் பெருகவும் கூடும். வேறு புதிய வடிவில் தோற்றமெடுக்கவும் கூடும்.

தமிழில்

சரி! ஆங்கிலத்தில் ஓரெழுத்து ஒரு சொற்கள் எத்தனை உள்ளன என்பதை இன்றையப் பாடத்தில் பார்த்தோம். ஆனால் தமிழர்களான நாம் நம் தமிழில் எத்தனை ஓரெழுத்து ஒரு சொற்கள் புழக்கத்தில் உள்ளன என்பதை அறிவோமா? தமிழில் 42 சொற்கள் உள்ளன.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக