இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கோவில்கள் ஒவ்வொன்றும் ஒரு அற்புதங்களை தனக்குள் வைத்துக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் வேலூர் அருகேயுள்ள மேல்பாடி தபஸ்கிருதாம்பாள் சமேத சோமநாதீஸ்வரர் கோவில்.
இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால், இங்குள்ள சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடைபெறுகிறது.
இக்கோவில் வேலூர் மாவட்டத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டை நாட்டின் வட பகுதியான வள்ளிமலையில் அமைந்துள்ளது. இங்கு, நீவா நதி என்ற பொன்னை ஆற்றின் மேற்கு கரையில் இக்கோவில் உள்ளது.
இது, 1,000 ஆண்டுகளுக்கு முன், பராந்தக சோழ மன்னரால் கட்டப்பட்டு, ராஜராஜ சோழ மன்னரால் குடமுழுக்கு செய்யப்பட்ட சிறப்புக்குரியது. இக்கோவிலின் தென்திசையில், 200 அடி தொலைவில், ராஜராஜ சோழனின் பாட்டனார், ஆரூர் துஞ்சியதேவன், கல்லறை அமைந்துள்ளது.
ராஜராஜசோழனின் தாய்வழிப்பாட்டனார் ஆரூர் துஞ்சியதேவன் என்பவர் கி.பி.1014-ல் நடைபெற்ற ஒரு போரில் வீரமரணமடைந்தார். அவரின் நினைவாக சோமநாதீஸ்வரர் கோவிலின் எதிர்புறத்தில் அரிஞ்சிகை
பழமை வாய்ந்த இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது ஆண்டுதோறும் 2 முறை சூரிய ஒளி விழுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 முதல் 24ஆம் தேதி வரையிலும், செப்டம்பர் 21 முதல் 24ஆம் தேதி வரையிலும் சூரிய ஒளி இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது விழுகிறது.
சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழும் அதிசய நிகழ்வு காலை 6.30 மணி முதல் 6.50 வரை நிகழ்கிறது. இந்த சூரிய ஒளி வாசல் வழியாக வந்து லிங்கத்தின் மீது நேரடியாக விழுகிறது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக