இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கர்நாடக மாநிலம் ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஹாசனாம்பாதேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஹாசனாம்பா கோவில் இருப்பதால்தான் இந்நகரமும் ஹாசன் நகரம் என்றே பெயர் பெற்றிருக்கிறது. மேலும் இக்கோவில் சிறப்புகளையும் தகவல்களையும் கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது.
10 நாட்கள் மட்டுமே திறக்கப்படும் !
இக்கோவில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்காக திறந்து விடப்படுகிறது. அக்டோபர் 25-ஆம் தேதியிலிருந்து, நவம்பர் 4-ஆம் தேதிவரை பக்தர்கள் ஹாசனாம்பா அம்மனை தரிசனம் செய்யலாம்.
அதாவது 10 நாட்களும் இரவு முழுவதும் நடை சாத்தப்படாமல் திறந்தே இருக்கும். எனினும்கோவில் 24ஆம்தேதியே திறக்கப்பட்டாலும் 24 மற்றும் 5-ஆம் தேதிகளில் சடங்குகள் நடை பெறுவதால் அந்த நாட்களில் பொதுமக்களுக்கு கோவிலில் நுழைய அனுமதி இல்லை.
இத்தகைய புகழ்பெற்ற ஹாசனாம்பாவுக்கு சுமார் 12-ம் ஆண்டு நூற்றாண்டில் கிருஸ்ணப்பா நாயக்க பாளையக்காரரின் காலத்தில் கோவில் எழுப்பப்பட்டது. இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு தடவை 10 நாட்கள் மட்டுமே நடை திறந்து பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
அணையா தீபம் !
ஹாசனாம்பா கோவில் ஒவ்வொரு ஆண்டும் மூடப்படும் நாளான பலி பட்யாமி என்ற தினத்தில் கோவிலில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபமானது அடுத்த ஆண்டு அஸ்வினி பூர்ணிமாவை தொடர்ந்து வரும் வியாழக்கிழமை கோவில் திறக்கப்படும் நாள் வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்குமாம்.
வாடா மலர்கள் !
ஹாசனாம்பா கோவில் மூடப்படும் இறுதி நாளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், மாலையிடப்படும் பூக்கள் எல்லாம் அடுத்த ஆண்டு வரை வாடாமல் இருக்கு மென்றும் பக்தர்கள் நம்புகி றார்கள். அதுமட்டு மல்லாமல் இந்த அதிசயத்தை பார்ப் பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் கோவில் திறக்கப்படும் நாளில் கோவிலுக்கு வருகிறார்கள்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக