இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இரண்டு நண்பர்களுக்கிடையே வாக்குவாதம் நடந்து கொண்டு இருந்தது. அப்போது ஒருவன் மற்றவனிடம், 'ராஜா, பேசுவதற்கு முன் கொஞ்சம் யோசித்துவிட்டுப் பிறகு பேசு. அவசரப்பட்டு வார்த்தையை விடாதே" என்றான். ராஜாவோ அலட்சியமாகத் தலையை அசைத்து, இப்போ இப்படி பேசினால் என்ன ஆகிவிடும் என்றான். அதற்கு மற்றொருவன் ஒன்றும் ஆகாது. குதிரை வாங்கியவன் நிலைதான் ஏற்படும் என்றான்.
அதற்கு ராஜா, 'அதென்ன புதுக்கதை விடுகிறாய்?" என்றான். மற்றொருவன் இது புதுக்கதையில்லை, ஒரு அனுபவக்கதை. அக்கதையை கூறுகிறேன் கேள் என்றான்.
ஒரு ஊரிலே முரடன் ஒருவன் இருந்தான். அவனிடம் ஒரு குதிரை இருந்தது. ஒரு நாள் அந்த முரடன் குதிரையின் மேல் அமர்ந்தப்படி சென்று கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு எதிரே குதிரை வியாபாரி ஒருவர், ஒரு குதிரையை இழுத்துக் கொண்டு அவனிடம் வந்தார். குதிரை வியாபாரி, ஐயா! இந்த குதிரையை பத்து பொற்காசுகளுக்கு வாங்கிக் கொள்கிறீர்களா? எனக் கேட்டான்.
பேராசை கொண்ட அந்த முரடன், ஆயிரம் பொற்காசுகளுக்கு போகும் இந்த குதிரையை வெறும் பத்து பொற்காசுகளுக்கு கேட்கின்றானே? இவன் பெரிய முட்டாளாக இருப்பான் போல என நினைத்துக் கொண்டான்.
சற்றும் யோசிக்காமல் அந்த முரடன் சரி, நான் வாங்கிக் கொள்கிறேன் என்று பத்து பொற்காசுகள் கொடுத்து வாங்கிக் கொண்டான். பின் அந்த முரடன், தன் குதிரையை சிறிது நேரம் பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு, புதியதாக வாங்கிய குதிரையின் மேல் சவாரி செய்து பார்க்க புறப்பட்டான். அப்போது குதிரை வியாபாரி, ஐயா! என் குதிரைக்கு கடிவாளம் தேவையில்லை. வார்த்தை ஒன்றே போதும். அப்பாடா என்று சொன்னால் குதிரை ஓடும். கடவுளே என்று சொன்னால் குதிரை நின்றுவிடும் என்று கூறினான்.
அதைக்கேட்ட பின் முரடன் குதிரையின்மீது ஏறி அமர்ந்து அப்பாடா என்றான். குதிரை வேகமாக ஓடத் தொடங்கியது. மகிழ்ச்சியாக சிறிது நேரம் சுற்றிப்பார்த்தான். நேரம் ஆக ஆக குதிரை நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தது. அதை நிறுத்த முரடன் எவ்வளவோ முயன்றான். ஆனால், அவனால் நிறுத்த முடியவில்லை. குதிரை காடு, மேடு நோக்கி பாதை செல்லும் வழியில் சென்றது. முரடனோ, ஏய் நில்லு என்று என்னென்னவோ சொற்களை சொல்லி பார்த்தான். குதிரை நிற்காமல் மலையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. முரடனும் குதிரைக்காரன் சொன்ன வார்த்தையை மறந்துவிட்டான்.
குதிரை மலையின் உச்சி நெருங்க நெருங்க முரடனுக்கு பயம் தொற்றிக் கொண்டது. நான் சாகப்போவது நிச்சயம் என நினைத்து கொண்டு கடவுளே என கூறினான். உடனே குதிரை நின்றுவிட்டது. குதிரை நின்ற சந்தோஷத்தில் அப்பாடா எனக் கூறினான். மீண்டும் குதிரை தன் வேகத்தை காட்ட தொடங்கியது.
இவ்வாறுதான் நாம் பேசும் வார்த்தைகளும். யோசிக்காமல் பேசி விட்டாலோ அவசரப்பட்டு பேசி விட்டாலோ முரடனுக்கு ஏற்பட்ட நிலைமை தான் நமக்கும். அதனால் பேசும்முன் சற்று நிதானமாக யோசித்து பேசுவது நல்லது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக