இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கோட்டை மாரியம்மன் விழாக்காலத்தில் சிம்மவாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம், ஆகிய வாகனங்களில் காட்சி தருகிறாள்.மூலவர் : மாரியம்மன்
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : திண்டீஸ்வரம்
ஊர் : திண்டுக்கல்
தல வரலாறு :
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய பீடமும், அம்மனின் மூலஸ்தான விக்ரகம் மட்டுமே இருந்தது. மலைக்கோட்டையின் கீழ் திப்பு சுல்தான் காலத்தில் இருந்த ராணுவத்தினர் ஒரு சிறு மடம் நிறுவி மாரியம்மன் சிலையை வைத்தனர். காலப்போக்கில் அதுவே திண்டுக்கல்லில் கோட்டை மாரியம்மனாகவும், காவல் தெய்வமாகவும் அம்மன் அருள் பாலிக்கிறார்.
அம்மன் சன்னதியை ஒட்டி முன்புறம் தெற்குப்பக்கம் விநாயகர் கோவிலும், வடக்குப்பக்கம் மதுரைவீரன் கோவிலும், முன்புற வடக்கில் நவக்கிரங்கள், பின்பக்கம் தென்புறம் முனீஸ்வர சுவாமி சன்னதி, வடபுறம் கருப்பண்ணசாமி சன்னதி உள்ளது.
தலபெருமை:
திண்டுக்கல் மாவட்டம் வாஸ்து சாஸ்திரப்படி அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரமாக திண்டுக்கல்லில் மேற்கு திசையில் மலையும், அதன் மீது கோட்டையும், அமைந்துள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோட்டை இன்றும் அழியாமல் உள்ளது.
இந்த கோட்டையிலிருந்து பழனிக்கு சுரங்கப்பாதை இருப்பதாகவும், இந்த வழியாக பல முறை திப்புசுல்தான் பழனிக்கு சென்றதாகவும் வரலாறு கூறுகிறது. இந்த மலைக்கோட்டையின் அழகான பின்னணியில்தான் இந்த அம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோட்டையால்தான் அம்மனும் கோட்டை மாரியம்மன் என அழைக்கப்படுகிறாள். அம்மன் அமர்ந்த கோலத்தில் இத்தலத்தில் வீற்றிருக்கிறாள்.
8 கைகளுடன் காட்சி தரும் அம்மனின் வலது கைகளில் பாம்பு, சூலாயுதம், மணி, கபாலம், ஆகியவையும், இடது கையில் அரிவாள், வில், கிண்ணம், பாம்பு ஆகியவைகள் காணப்படுகின்றது.
கோட்டை மாரியம்மன் மற்ற தெய்வங்களைக் காட்டிலும் சிலையின் அடிப்பகுதி, பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் புதைந்து இருப்பது சிறப்பாகும்.
பிரார்த்தனை :
இங்கு அம்மனை வேண்டிக்கொண்டால் குழந்தை வரம் கிடைக்கும். அம்மை, உடல் உறுப்புகள் குறைபாடுகள் நீங்கும் மற்றும் தீராத நோய்களும் குணமாகின்றன.
நேர்த்திக்கடன் :
நோய் நொடிகள் நீங்க மஞ்சளும், உப்பும் கொடி கம்பத்தடியில் இடுகிறார்கள். கொடி ஏற்றும் போது பெண்கள் புனித நீர் அபிஷேகம் நடத்துவர். இதன் மூலம் அம்மனின் கோபம் தணிந்து நாட்டுக்கு நன்மை தருவதாக ஐதீகம். இதுபோன்ற பல்வேறு நேர்த்திகடனை செலுத்துவார்கள்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக