Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 24 ஜூலை, 2019

ஆங்கில பாடப் பயிற்சி 17 (could, was/were able to)


Image result for could, was/were able to


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




இன்று நாம் 19, 20, 21, 22 ஆகிய இலக்கங்களின் (could, was/were able to) வாக்கிய அமைப்புக்களை விரிவாக பார்க்கப் போகின்றோம்.

இந்த  வலைத்தளத்திற்கு நீங்கள் புதிய வருகையாளர் என்றால், எமது ஆங்கில பாடப் பயிற்சிகளைத் தொடர விரும்புவரானால் உங்கள் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 , 2, 3, 4, 5 என இலக்க வரிசை ஒழுங்கில் தொடரும் படி கேட்டுக்கொள்கின்றேன்.



சரி இன்றைய பாடத்திற்குச் செல்வோம்.

19. I could do a job.
20. I was able to do a job.
எனக்கு செய்ய முடிந்தது ஒரு வேலை.

21. I couldn't do a job.
22. I was unable to do a job. (wasn't able to)
எனக்கு செய்ய முடியவில்லை ஒரு வேலை.

கடந்தப் பாடத்தில் “can, am/is/are able to” இவற்றின் இறந்தக்காலப் பயன்பாடாகவே “could, was/were able to” பயன்படுகிறது. "could" மற்றும் “was/were able to" இரண்டுக்குமான வேறுப்பாடு “could” ஒரு துணை வினையாகும். ஆனால் “was/were able to” துணை வினைகள் அல்ல.

இவற்றை இரண்டுப் பகுதிகளாகப் பார்ப்போம்.

பகுதி - 1

Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Main verb
1. I / He/ She/ It/ You/ We/ They + could + do a job.

Negative
Subject + Auxiliary verb + not + Main verb
1. I/ He/ She/ It/ You/ We/ They + could + not + do a job.

Question (Interrogative)
Auxiliary verb + Subject + Main verb
1. Could + I/ he/ she/ it/ you/ we/ they + do a job?

மேலே பாருங்கள் I, He, She, It, You, We, They போன்ற வாக்கியங்களோடு "Could" மட்டுமே பயன்படுகிறது. (Could is invariable; there is only one form of could.)

கீழுள்ளவாறு கேள்வி பதிலாகவும் அமைத்து பயிற்சி செய்யலாம்.

Could you do a job?
உனக்கு செய்ய முடிந்ததா ஒரு வேலை?
Yes, I could do a job.
ஆம், எனக்கு செய்ய முடிந்தது ஒரு வேலை.
No, I couldn’t do a job. (could + not)
இல்லை, எனக்கு செய்ய முடியவில்லை ஒரு வேலை.

Could you come last night?
உனக்கு வர முடிந்ததா நேற்று இரவு?
Yes, I could come last night.
ஆம், எனக்கு வர முடிந்தது நேற்று இரவு.
No, I couldn’t come last night. (could + not)
இல்லை, எனக்கு வர முடியவில்லை நேற்று இரவு.

பகுதி – 2

இறந்தக்காலத்தின் பொதுவான ஆற்றல்களை வெளிப்படுத்த “could” போன்றே “was/were able to” - களும் பயன்படுகின்றன. இருப்பினும் + able to ஒரு துணை வினையல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Positive (Affirmative)
Subject + be + able + infinitive
1. I/ He/ She/ It + was + able + to + do a job.
2. You/ We/ They + were + able + to + do a job.

Negative
Subject + be + able + infinitive
1. I/ He/ She/ It + was not + able + to + do a job.
2. You/ We/ They + were not + able + to + do a job.

Question (Interrogative)
Be + subject + able + infinitive
1. Was + I/ he/ she/ It + able + to + do a job?
2. Were + you/ we/ they + able + to + do a job?

இவற்றிலும் சில வாக்கியங்களை கேள்வி பதில்களாக மாற்றி காட்டப்பட்டுள்ளன. இவ்வாறு நீங்களும் பயிற்சி செய்யலாம்.

Were you able to do a job?
உனக்கு முடிந்ததா செய்ய ஒரு வேலை?
Yes, I was able to do a job.
ஆம், எனக்கு முடிந்தது செய்ய ஒரு வேலை.
No, I was unable to do a job. (was not able to என்றும் கூறலாம்)
இல்லை, எனக்கு முடியவில்லை செய்ய ஒரு வேலை.

Were they able to speak five languages?
அவர்களுக்கு பேச முடிந்ததா ஐந்து மொழிகள்?
Yes, they were able to speak five languages.
ஆம், அவர்களுக்கு பேச முடிந்தது ஐந்து மொழிகள்.
No, they were unable to speak five languages. (were not able to)
இல்லை, அவர்களுக்கு பேச முடியவில்லை ஐந்து மொழிகள்.

இறந்தக்காலத்தின் பொதுவான ஆற்றல்களை விவரிக்க “could” அல்லது “was/were able to” இவை இரண்டில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம். இரண்டும் ஒத்தக்கருத்துச் சொற்களாகவே பயன்படுகின்றன. (You can use either "could or was/were able to" describe a general ability (but not a specific achievement) in the past.)

மேலும் சில வாக்கியங்களை தமிழ் விளக்கத்துடன் பயிற்சி செய்வோம்.

1. I could swim when I was 5 years old.
I was able to swim when I was 5 years old.
எனக்கு நீந்த முடிந்தது எனக்கு ஐந்து வயதாக இருந்தப் பொழுது.

2. I could run the 100 meter race very well.
I was able to run the 100 meter race very well.
எனக்கு ஓட முடிந்தது 100 மீட்டர் ஓட்ட(பந்தய)ம் மிக நன்றாக.

3. I could see the sun rise every morning.
I was able to see the sun rise every morning.
எனக்கு பார்க்க முடிந்தது சூரிய உதயம் ஒவ்வொரு நாளும்.

4. I could sing very well when I was a child.
I was able to sing very well when I was a child.
எனக்கு மிக நன்றாக பாட முடிந்தது நான் ஒரு குழந்தையாக இருந்தப் பொழுது.

5. I could draw pictures.
I was able to draw pictures
எனக்கு வரைய முடிந்தது படங்கள்.

6. I could ride a bike when I was six.
I was able to ride a bike when I was six.
எனக்கு ஓட்ட முடிந்தது உந்துருளி நான் ஆறு வயதாக இருந்தப் பொழுது(தே)

7. I could drive my car yesterday
I was able to drive my car yesterday.
எனக்கு ஓட்ட முடிந்தது எனது மகிழூந்தை நேற்று.

8. I could take photographs
I was able to take photographs
எனக்கு எடுக்க முடிந்தது நிழல் படங்கள்.

9. I could climb tree.
I was able to climb tree.
எனக்கு ஏற முடிந்தது மரம்.

10. I could read when I was five.
I was able to read when I was five.
எனக்கு வாசிக்க முடிந்தது நான் ஐந்து வயதாக இருந்தப் பொழுது(தே).

Homework:

1. மேலே நாம் கற்ற 10 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றி எழுதி பயிற்சிப் பெறுங்கள்.

2. கேள்வி பதிலுமாக மாற்றியவற்றைப் பேசி பயிற்சி பெறலாம்.

3. மேலும் He, She, It, You, They, We போன்ற சொற்களுடன் இணைத்து வாக்கியங்கள் அமைத்து பயிற்சி செய்யுங்கள்.

4. கடந்தக் காலத்தில் உங்களால் என்னென்ன செய்யக் கூடிய ஆற்றல்கள் இருந்தது அல்லது செய்ய முடிந்தது என்பதை ஒரு பட்டியல் இட்டுக்கொள்ளுங்கள். உங்களால் "முடியவில்லை" என்று விடுப்பட்டவைகள், செய்ய முடியாமல் போனவைகளையும் ஒரு பட்டியலிட்டுக்கொள்ளுங்கள். பின் அவற்றை இன்றையப் பாடத்தில் நாம் பயிற்சி செய்ததைப் போன்று ஆங்கிலத்தில் எழுதி பயிற்சி செய்யுங்கள். பேசியும் பயிற்சி செய்யலாம்.

5. கீழுள்ளவாறு நீண்ட சொற்றொடர்களாகவும் எழுதிப் பயிற்சி செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

When we were staying at the hotel, we could see the sun rise every morning.
When we were staying at the hotel, we were able to see the sun rise every morning.
நாங்கள் விடுதியில் இருந்துக்கொண்டிருந்த (காலத்தில்) பொழுது, எங்களுக்கு பார்க்க முடிந்தது சூரிய உதயம் ஒவ்வொரு (நாள்) காலையிலும்.

My brother could drive cars when he was 10 years old.
My brother was able to drive cars when he was 10 years old.
என் சகோதரனுக்கு ஓட்ட முடிந்தது மகிழூந்து அவன் பத்து வயதாக இருந்தப் பொழுது(தே).

When I was living in Point Pedro, I could walk to work.
When I was living in Point Pedro, I was able to walk to work.
நான் பருத்தித்துறையில் வசித்துக்கொண்டிருந்தப் பொழுது, எனக்கு நடந்து செல்ல முடிந்தது வேலைக்கு.

கவனிக்கவும்

இறந்தக்காலத்தின் பொதுவான ஆற்றல்களை விவரிக்க “could or was/were able to” இரண்டில் ஏதையேனும் பயன்படுத்தலாம் என்பதைக் கற்றோம். ஆனால் இறந்தக்காலத்தில் குறிப்பிட்ட ஓர் செயலை, ஆற்றலை அல்லது தனிப்பட்ட நிகழ்வை விவரிக்க கட்டாயம் “was/were able to” பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள். (You must use “was/were able to” to describe a special achievement or a single event in the past.) (இச்சமயங்களில் “could" பயன்படுத்துதல் பொருத்தமற்றது.)

உதாரணம்:

A man fell into the river yesterday. The police were able to save him. v (சரி)
A man fell into the river yesterday. The police could save him. X - (பிழை)
ஒரு மனிதன் விழுந்தான் ஆற்றினுள் நேற்று, காவல் துறையினரால் காப்பாற்ற முடிந்தது அவனை.

அதேவேளை எதிர்மறை வாக்கியங்களின் போது couldn’t அல்லது was/were able to இரண்டில் எதனையும் பயன்படுத்தலாம். இரண்டும் சரியானதே. (In the negative,' wasn't able to' OR 'couldn't' are both correct.)

உதாரணம்:

Sarmilan wasn't able to drive his car yesterday.V
Sarmilan couldn't drive
his car yesterday.V
சர்மிலனுக்கு ஓட்ட முடியவில்லை அவனது மகிழூந்தை நேற்று.

குறிப்பு:

1. பொதுவான ஆற்றல்களை அல்லது சாத்தியத்தை விவரிக்க “can, - am/is/are able to” இன் இறந்தக்காலப் பயன்பாடாகவே “could, - was/were able to” பயன்படுகிறது.

விளக்கப்படத்தைப் பாருங்கள்

Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhizt5POtS9EyP7P1-jAafvkzkUB__NBZLd_LjGfiPHHOaHq6wSPfwZhDYVEmRP6lPCo2ZrfS26kO984iwO2UTxUURp845Aya91oNkNd3cC4goygKcS_axp-o9IRMSvILaTno51BrT1-aBy/s320/could.jpg
2 . could, - was/were able to இரண்டுக்குமான வேறுப்பாடு: could ஒரு துணை வினையாகும். was/were able to துணை வினையல்ல.

3. முக்கியமாக “could” எப்பொழுதும் பிரதான வினையுடன் "bare infinitive" வாகவே பயன்படும். அதாவது பிரதான வினைச்சொல்லுடன் வினையெச்சம் "to" இணைந்து வராது. (The main verb is always the bare infinitive; 'infinitive without "to".)

5, ஆனால் "be able to" வாக்கிய அமைப்புக்களுடன் வினையெச்சம் “to” இணைந்து பயன்படும். (be able to has an infinitive form.)

6. ஏதாவது ஒன்றை (நம்மிடம் இல்லாத ஒரு ஆற்றலை அல்லது பரிச்சயம் இல்லாத ஒன்றை) மிகக் கடினத்துடன் செய்து முடித்திருந்தால் நாம் அதனை விவரிக்க "managed to" பயன்படுத்தலாம். (If it was something difficult we use "managed to".)

உதாரணம்:

She managed to delete the virus from her computer.
அவள் கடினத்துடன் சாமாளித்து/முயற்சித்து அழித்தாள் நச்சு நிரல்களை அவளுடைய கணனியில் இருந்து.

குறிப்பு:

இன்றையப் பாடத்தில் விவரிக்காத "Could" இன் இன்னுமொரு சிறப்புப் பயன்பாடும் உள்ளது. அதனை சிறப்புப் பாடமாக “Polite and More Polite” அடுத்தப் பாடத்தில் கற்கலாம்.

மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

இன்றையப் பாடம் தொடர்பான சந்தேகங்கள் கேள்விகள் இருப்பின் வழமைப்போல் பின்னூட்டம் இட்டோ மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக