இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அதிசயங்களை தேடி உலகெங்கும் பலர் சுற்றுவதுண்டு. ஆனால் நம்மை சுற்றியே பல அதிசயங்கள் புதைந்து கிடைக்கிறது. இந்தியாவின் அடையாளமே கோவில்கள்தான். ஆதி காலம் முதலே கோவில்களை கட்டும்போது, ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைப்பதை நமது முன்னோர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த வகையில் ஒவ்வொரு கோவிலும், ஒவ்வொரு வகையில் தனி சிறப்பைப் பெறுகிறது. அந்த வகையில் நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் கோவில் பற்றிய அதிசய தகவல்களை காண்போம்....
உலக புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோவில் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.
18 அடி உயரத்தில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட திருவுருவமாகவும், இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலைகளில் ஒன்றாகவும் திகழ்கிறது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலை.
கோபுரம் வேண்டாம் :
நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் உள்ள ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. வெயிலிலும், மழையிலும், காற்றிலும் பொலிவு மாறாமல் காட்சி அளிக்கிறார். அவர் வீற்றிருக்கும் இடம் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டது.
நாமக்கல் கோவிலின் சிறப்புகள் :
இச்சா சக்தி (நாமகிரி அம்மன்), கிரியாசக்தி (நரசிம்மர்), ஞானசக்தி (ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற கோவில் இது.
பீடத்தில் இருந்து 22 அடியும், பாதத்தில் இருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது.
வெட்ட வெளியில் மழையிலும், வெயிலிலும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
எப்படி செல்வது :
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 57 கிலோ மீட்டர் தூரத்திலும், கரூரில் இருந்து 43 கிலோ மீட்டர் தூரத்திலும், ஈரோட்டில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திலும், கோவையில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்திலும், திருச்சியில் இருந்து 85 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக