இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சிரியாவில் உக்கிரமடைந்துள்ள
உள்நாட்டுப் போர் காரணமாக 26 குழந்தைகள் உள்ளிட்ட 100 இற்கும் மேற்பட்டவர்கள்
உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிரியாவின் வட மேற்கு பகுதியில் உள்ள
வைத்தியசாலைகள், பாடசாலைகள், சந்தைகள் மற்றும் உணவகங்களில் கடந்த பத்து நாட்களில்
நடத்தப்பட்ட வான் தாக்குதலிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த
தாக்குதல்களுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் மிச்செல்
பச்சலெட் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
கிளர்ச்சியாளர்களின் பிடியிலுள்ள
பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சிரிய அரசு மற்றும் அதன் கூட்டாளிகளே காரணம்
எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த தாக்குதல் ‘வெளிப்படையான சர்வதேச
அலட்சியத்தால்’ நடைபெற்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உலகின்
வலிமைவாய்ந்த நாடுகளில் உள்ள தலைமையின் தோல்வி இது எனவும் மிச்செல்
தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்படும் சர்வதேச தாக்குதல்கள் போர் குற்றங்களாகும். அந்த தாக்குதலுக்கு ஆணையிட்டவர்கள், அல்லது நடத்தியவர்கள்தான் அதற்கு பொறுப்பு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக