55-இன்ச் 4கே
ஏஐ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி
டிசிஎல் அறிமுகம்
செய்துள்ள 55-இன்ச் 4கே ஏஐ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல் அமேசான் வலைதளம் மூலம்
விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின்
பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
டைனமிக் பிக்சர்
அட்ஜஸ்ட்மென்ட்
டிசிஎல் நிறுவனத்தின்
55-இனச் 4கே ஏஐ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல் பொதுவாக 3860 x 2160 பிக்சல்
திர்மானம் மற்றும் எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு டைனமிக்
பிக்சர் அட்ஜஸ்ட்மென்ட், சீன் பிக்சர் விரிவாக்கம் மற்றும் பிரைட்நஸ் கட்டுப்பாடு
போன்ற பல்வேறு வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளது.
அசத்தலான சிப்செட்
வசதி:
இந்த ஸ்மார்ட டிவி
மாடல் பி8இ-உரிமம் கொண்ட குவாட்-கோர் சிபியு டிரிபிள்-கோர் 600-800 MHz GPU, 2GB
DDR3 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.
கூகுள் பிளே
ஸ்டோர்
கூகுள் பிளே ஸ்டோர்
வசதியுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவரும், அதன்படி நெட்ஃபிக்ஸ், யூடியூப், பிரைம்
வீடியோ, ஈரோஸ்நவ், ஜி5, போன்ற பல்வேறு செயலிகளைப் பயன்படுத்த முடியும் என்பது
குறிப்பிடத்தக்கது.
அமேசான் அலெக்சா
குரல் கட்டளை
இந்த ஸ்மார்ட் டிவியை
பயன்படுத்தி சேனல்களை மாற்றுவது மற்றும் ஆடியோவை சரிசெய்தல் போன்ற டிவியின்
முக்கிய செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த அமேசான் அலெக்சா குரல் கட்டளையைப் பயன்படுத்த
வசதி செய்து தரப்பட்டுள்ளது, குறிப்பாகத் தொலைதூர குரல் தொழில்நுட்பத்துடன்
வருகிறது இந்த ஸ்மார்ட்டிவி. ரிமோட்டில் பொத்தானை அழுத்தாமல் இதைத் தேர்வு செய்து
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாகத் தான் இருக்கும்.
ஸ்டீரியோ பாக்ஸ்
ஸ்பீக்கர்கள்
இந்த டிசிஎல் ஸ்மார்ட்
டிவியில் உள்ளடக்கப்பட்ட ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆடியோ 5.1
ஆதரவு இருப்பதால் ஒரு நல்ல தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும், அதேசமயம் ஏஐ சார்ந்த
அம்சங்கள் இன்டெர்நெட் மற்றும்
பல்வேறு செயலிகளை
இயக்குவதற்கு வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இணைப்பு ஆதரவுகள்
மற்றும் விலை:
டிசிஎல் நிறுவனத்தின்
55-இனச் 4கே ஏஐ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியில் எச்டிஎம்ஐ 2.0, யுஎஸ்பி2.0, வைஃபை,
ப்ளூடூத் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட் டிவியின்
உண்மை விலை ரூ.40,990-ஆக உள்ளது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக
பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்
குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத
கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம்
என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து
பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக