Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 15 ஜூலை, 2019

ஆவியுடல் பயணம் - (Astral Projection or Out of body experience)

Image result for ஆவியுடல் பயணம் - (Astral Projection or Out of body experience)

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



                            
                         திரு.வில்மாட் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு கப்பலில் பயணம் சேது கொண்டிருந்தார். காலநிலை சரியில்லாததால் கப்பல் பயணம் துன்பத்துடன் தொடர்ந்து கொண்டிருந்தது. எட்டாவது நாள் நள்ளிரவில், புயலின்  நடுவில் அவர் ஒரு கனவு கண்டார். அவரது மனைவி அந்த கப்பலில்  அவரது அறைக்குள்  நெருங்கி வந்து முத்தமிட்டுவிட்டு சற்று நேரம் அவரை கவனித்துவிட்டு அமைதியாக செல்வதை போலவும் உணர்ந்தார். கப்பலில் அவருடன் அந்த அறையில் வில்லியம் ஜே.டேயிட் என்ற பயணியும் தங்கியிருந்தார். காலையில் அவரன் வில்மார்டை நோக்கி அதிர்ச்சி தரு ஒரு கேள்வியை கேட்டார்.

நேற்றிரவு நீங்கள் துங்கி கொண்டிருந்த பொது அழகான ஒரு பெண் திடீரென்று நம் அறைக்குள் வந்தாள். என்னை கண்டு சிறிது தயங்கினாள். பிறகு உள்ளே நெருங்கி வந்து உங்கள் கன்னத்தில் முத்தமிட்டால். சற்று நேரம் கழித்து தயங்கி நின்று வெளியே பொய் விட்டாள். யார் அந்த பெண்? ஏன் இங்கு வந்தாள்? 

சகபயணி கூறிய அங்க அடையாளங்கள் அனைத்தும் வில்மாட்டின் மனைவியை போலவே இருந்தன. நேற்றிரவு அவர் கனவில் கண்டதை இவர் நேரில் பார்த்ததாக கூறினார். வில்மாட்டிற்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு வாட்டர் டவுன் என்ற இடத்தில தனது மனைவியை சந்தித்தார். அவள் கூறிய செய்தி அதிர்ச்சியடைய வைத்தது.. 

நீங்கள் பயணம் செய்த கப்பல் காலநிலை சரியில்லாமல் தவிப்பதாக செய்தி வந்தது.  அன்றைய தினம் மணம கலங்கினேன். உங்களை பற்றி எண்ணியே கவலைப்பட்டேன். நீண்ட நேரம் துக்கம் வராமல் தவித்தேன். நள்ளிரவு நேரத்தில் திடீரென்று நான்எங்கேயோ பறப்பதை போல் இருந்தது. கடலுக்கு மேலே பறப்பதாக உணர்ந்தேன்.



"பலத்த காற்றினால் உண்டாகும் அலைகளில் தள்ளாடியபடியே ஒரு கப்பல் பயணம் சேது கொண்டிருந்தது. நான் அந்த கப்பலில் நுழைந்து பார்த்தபோது ஒரு அறையில் நீங்கள் துங்கி கொண்டிருந்தீர்கள். மகிழ்ச்சியுடன் உள்ளே நுழைந்தேன். அனால் அந்த அறையில் வேறு நபரும் இருந்தார். சிறிது தயங்கிய பிறகு உங்களை நெருங்கி முத்தமிட்டேன். சற்று நேரத்தில் திரும்பி விட்டேன். நான் வந்தது உங்களுக்கு தெரிந்ததா?... என்றாள்.

 இது படிப்பவர்களுக்கு ஆர்வமற்ற ஆனால் சமயத்தில் ஒரு உண்மை சம்பவம் ஆகும். இதை இங்கு கூறியதன் நோக்கம் பற்றி அறியும் முன்னர் மற்றுமொரு உண்மை சம்பவத்தை பாப்போம். இது அனைவரும் ஏறக்குறைய அறிந்த நிகழ்வாக தான் இருக்கும்.

  மறைந்த முன்னாள் அமெரிக்க அதிபர் கண்ட கனவை பற்றி தன் மனைவி மற்றும்  நண்பர் வார்ட் ஹில் லேமொனிடம்  விவரிக்கிறார்.




   "நான் மாளிகையின் கிழக்கே உள்ள அறையை நோக்கி செல்கிறேன். அங்கே போர்த்திய  உடலை பார்த்து அனைவரும் கதறி அழுது கொண்டிருக்க சுற்றிலும் ராணுவ வீரர்கள் பாதுகாத்து நின்று கொண்டிருக்கிறார்கள். நான் அதில் ஒரு ராணுவ வீரனை அழைத்து இறந்தவர் யார் என கேட்க, அவன்  இறந்தது ஜனாதிபதி, அவரை கொலை  செய்து விட்டார்கள்" என பதில் அளிக்கிறான்.   பிறகு நான் விழித்துவிட்டேன்
 

இதை அவர் நகைச்சுவையாக கூறி பிறகு அப்படியே மறந்து விடுகிறார். அனால் இந்த கனவு வந்து சில நாட்களுக்கு பிறகு அவர் கொலை செய்யப்பட்டு கனவில் வந்த அதே கிழக்கு அறையில் அவர் உடல் அஞ்சலி செலுத்த பட்டு கொண்டிருகிறது.

 மேலே சொன்ன இரண்டு சம்பவங்களின் அடிப்படையும் ஒன்றே. Astral Projection. 
ஆன்மிக ரீதியாக மனிதனானவன்   ஸ்தூல உடல், சூட்சும உடல் எனும் அம்சங்களை கொண்டு உருவானது ( உண்மையில் 3 உடல்கள்) என்கிறது புராண தத்துவங்கள்.  இதிகாசங்களிலும் ஆன்மிகத்திலும் நம்பிக்கை இல்லை என்பவர்கள் தயவு செய்து வாதம் செய்ய வேண்டாம். ரெய்கி எனப்படும் நவீன வளர்ந்து வரும்  சிகிச்சைமுறையின் அடிப்படையே  ஆரா(Aura) எனும் ஒளியுடலை சீராக இயங்க வைப்பது தான்.  எனவே நான் இங்கு கூறப்பட்டுள்ள அந்த ஸ்தூல உடலை ஆரா என்பதின் உட்கருவாக நீங்கள் தாரளமாக எடுத்துகொள்ளலாம். 

 (உண்மையில் Aura என்பது ஸ்தூல உடலின் சக்தியின் பரந்துவிரிந்த ஒரு வெளிப்பாடு தான். எனவே ஸ்தூல உடலும், ஆராவும் ஒன்றோடு ஒன்று தொடர்புடயது எனினும் ஆரா மனித உடலின்றி தனித்து செயல்படமுடியாதது.)

சமீபத்தில் எந்திரன் என்பதின் படத்தின் கருவாக இதனை கொண்டிருப்பார்கள். ஆனால் முற்றிலும் தவறாக சித்தரிக்கப்பட்ட ஒரு எடுத்துகாட்டாகும்

Astrl Projection:

அதாவது "உடலை விட்டு ஆன்மா எனப்படும் ஆவியுடல் அல்லது சூட்சும உடலானது வெளிப்பட்டு மனித உடலால் உணர முடியாத பல்வேறு அமானுஷ்ய சூட்சும விஷயங்களை உணரும் தன்மை ஆகும்".


இப்பொழுது நான் இங்கு கூறப்போகும் விஷயம் சற்று சிக்கலானது அதே சமயத்தில் என்னால் முடிந்த அளவு எளிமையாக கூறுகிறேன். உங்களால் முடிந்த அளவு புரிந்து கொள்ளுங்கள்! 

     ஒரு மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தை எடுத்துகொள்வோம். அங்கு உள்ள அனைத்துக் கணினிகளின் செயல்பாடுகளுக்கும் வேண்டிய தகவலானது நிறுவனத்தின் முக்கிய சர்வர் (Server) ஒன்றிலிருந்து தான் சேமித்து வைக்கப்படும். அந்த சர்வரின் தகவல்களை  Clienet Access License (CAL) எனும்  உரிமம் உள்ள கணினிகள் அல்லது நபர்கள்ம ட்டுமே பயன்படுத்தமுடியும். இவ்வாறாக அந்த சர்வர் தனது வேலையே செவ்வனே செய்து வருகிறது. 

நவீன குவாண்டம்  அறிவியலின் படி நம்முடைய முப்பரிமான உலகமானது Physical Plane எனப்படும் துகள்களால் உருவான ஒரு முப்பரிமான அமைப்பு  ஆகும். இந்த 3D world நேரம் என்பதை கருவாக கொண்டு  தற்போது வரை இயங்கி கொண்டிருகிறது. இப்போது எதற்கு இந்த விளக்கம் என்று குழம்புகிறதா... வேறு வழியில்லை. தொடர்ந்து படியுங்கள். 

Astral என்பது Astral Plane என்பதை குறிக்கும். Astral Plane என்பது நமது முப்பரிமாணத்தை போல் அல்லாமல் ஆனால் அதை சுற்றி அதனுடன் தொடர்புடைய, அதற்கு அடுத்ததாக  மற்றுமொரு பரிமாணமாக உள்ளது. இதில் காலம் என்பது முக்கிய கருவாக இருக்காது என்று கூறபடுகிறது. இந்த பரிமாணத்தை நமது முப்பரிமான துகள்களால் ஆனா உடலால் உணரமுடியாது. இந்த astral என்பதில் தான் உலகின் அனைத்து தகவல்களும் சேமித்து வைக்கபடுகின்றன. இந்த தகவல் சேமித்தலை பற்றி விரிவாக எழுதினால் குவாண்டம் இயற்பியலும்,இன்னும் சற்று சிக்கலான விஷயங்களை பற்றியும் தெளிவாக எழுத வேண்டியிருக்கும். எனவே இப்போதைக்கு நமது அணைத்து செயல்பாடுகளும் அணைத்து அசைவுகளும் நமக்கு மேலே உள்ள விண்வெளியில் சேமிக்கபடுகிறது என்பதை மட்டும் சொல்லிக்கொண்டு, விரிவாக மற்றுமொரு தனி அத்தியாத்தில் எழுதுகிறேன். இதில் முக்காலமும் அடங்கும். நடந்த, நடக்க போகின்ற, நடந்து முடிந்த அணைத்து செயல்பாடுகளும் இங்கு தரவுகளாக சேமிக்க படுகின்றன.

நான் மேலே சொன்ன நிறுவனத்தின்  சர்வர் (Server) என்பது அந்த தகவல்கள் சேமித்து வைக்கபட்டிருக்கும் வெளி அல்லது Astral Plane ஆகும். அந்த தகவல்களை பயன்படுத்தும் கணினி நாம் தான். ஆனால் அனைவராலும் அதை பயன்படுத்த முடியாதே. Clinet Access License (CAL) எனும் உரிமம் வாங்க வேண்டுமல்லவா? அந்த உரிமம் தான் Astral Projection.  அதாவது அந்த சர்வரில் உள்ள தகவல்களை உணர்வதற்கு உருவாக்கப்பட்ட ஒன்று ஆகும்.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸபா.... ஒரு வழியாக சொல்லவந்ததை சரியாக சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன்.  அந்த துகள்களற்ற பரிமாணத்திலிருந்து தரவுகளை பெரும் அளவுக்கு நம்முடைய மனித மூளையானது கட்டமைக்க படவில்லை. ஆனால் நம்முடைய மனம் அல்லது Astral Body எனப்படும் உடலானது அந்த தன்மையை உடையது. நம்முடைய உடலிளிருந்து நம்முடைய மனம் பிரித்து நிற்கும் போது அந்த Astral Body  எனும் ஆவியுடல் அந்த Astral எனும் server ல் இருந்து தரவுகளை பெறும் உரிமம் அல்லது சக்தியனை பெறுகிறது. அந்த Astral projection  என்பதை முறையாக செயல்படுதுவதேன்பது முடியாத ஒன்றாக பலருக்கும் உள்ளது. ஆனால் ஒரு குறிப்பிட்ட அதிர்விற்கு நம்முடைய மனத்தை பழக்கபடுத்தும் போது (Tuning) இது சாத்தியமாகிறது. இதற்கு தான் பலரும் யோகாசனம், தியானம் போன்ற பல்வேறு வழிமுறைகளை முயற்சி செய்கிறார்கள். 



ஆனால் நம்மில் பலரும் இந்த Astral Projection எனப்படும் பயணத்தை நமக்கே தெரியாமல் செய்திருக்க சாத்தியங்கள் அதிகம். பல்வேறு நேரங்களில் கனவுகள் மூலம் இது நிகழக்கூடும். நீங்கள் எப்போதாவது மிக களைப்பாக படுத்து  உறங்கிய பிறகு மேலே பறப்பது போலவும், உங்களுக்கு பரிச்சயமான இடத்தில இருபது போலவும் உணர்ந்திருக்கிறீர்களா. ஆமெனில் நீங்களும் astral projection செய்து ஆவியாகி விட்டீர்கள் என்பதை  சிறிதேனும் உணருங்கள். ஏனெனில் நாம் அனைவரும் முன்னாள், இந்நாள், பின்னாள் ஆவிகளே! ஆனால் இது சிக்கலற்ற ஒரு பயணம் ஆகும். ஆனால் அந்த தரவுகளை பெறுவதற்கு மனதின் ஸ்திரத்தன்மை அல்லது ஒருமுகத்தன்மை  முக்கியமானதாக உள்ளது. எனவே தான் சாதாரண மனிதர்களில் பலருக்கு இது  தூக்க நிலையில் மட்டுமே நிகழ்கிறது.

  மேலே சொன்ன நிகழ்வில் லிங்கனின் கனவானது அவரது Astral Body  ஆனது அவரது எதிர்காலத்தின் தரவுகளை Astral Plane இல் செயல்படும் போது பெற்று அவருக்கு கனவில் காட்சிகளாக கொடுத்துள்ளது. Extra Sensory Perception எனும் ESP சக்திகளில் இது Precognitition எனப்படும் எதிர்காலத்தை உணர்த்தும் ஒரு வகை ஆகும்.

அந்த பெண்மணியின் கனவானது Psychon எனும் கூற்றோடு தொடர்புடையது. எந்த வித விளைவுகளையும் ஏற்படுத்தாது மனதின் ஏக்கத்தால் உருவான ஒரு எளிய தோற்றம் ஆகும். தன கணவரை கண்டவுடன் அந்த மனதின் எண்ணம் நிறைவேறி  Psychon என்பது சிறிது சிறிதாக சக்திற்ற நிலையை அடைந்து மறைந்துவிடுகிறது. இது Travel Clairvoyance என்னும் மற்றொரு வகை ESP ஆகும். 

  இது போன்ற பல்வேறு ESP சக்திகள் நம்மை சுற்றிலும் ஏன் நம்மிடத்திலும் இருக்கின்றன.  இருந்த இடத்தில இருந்தே தொலைதூர காட்சிகளை காணும் Clairvoyance  எனும் அற்புத சக்தி நம்மில் பலரும் அல்லது நம்மை நெருங்கியோரும் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எப்போதாவது உங்களுக்கு நெருக்கமானவர் இறக்கும் தருவாயில் உள்ளபோதோ அல்லது அவர் சங்கடத்தில் உள்ளபோதோ உங்களுக்கே அறியாமல் அவரை பற்றிய ஒரு எண்ணம் திடீரென்று தோன்றி மறைவதை கண்டிருக்கிறீர்களா? பிறகு சிலநாட்கள் கழித்து "எனக்கு அப்பவே மனசுல என்னமோ தோனுச்சு சரி இல்லன்னு எனும் வாக்கியத்தை நீங்களே உதிர்த்து இருக்கிறீர்களா?" ஆமெனில் அடுத்த பதிவு உங்களுக்காக தான். 


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக