இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம், நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புற்களை தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய் என்று கூறினார்.
அதற்கு உடனே கழுதை, நான் கழுதையாக இருக்கிறேன். ஆனால், 50 வருடங்கள் என்பது ரொம்ப அதிகமாக உள்ளது. எனக்கு 20 வருடங்கள் போதும் என்றது.
கடவுளும், கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்...!
அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம், நீ மனிதனின் வீட்டை காக்கும் காவலனாக இருப்பாய். அவனுடைய அன்பு தோழனாகவும் இருப்பாய். மனிதன் சாப்பிடும் போது உனக்கும் உணவு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய் என்று கூறினார்.
அதற்கு உடனே நாய், கடவுளே! 30 வருடங்கள் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருடங்கள் போதும் என்றது.
கடவுளும், நாயின் ஆசையை நிறைவேற்றினார்...!
அடுத்ததாக கடவுள் குரங்கை படைத்து அதனிடம், நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும்.
நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய் என்று கூறினார்.
அதற்கு குரங்கு, 20 வருடங்கள் ரொம்ப அதிகம். 10 வருடங்கள் போதும் என்றது.
கடவுளும், குரங்கின் ஆசையை நிறைவேற்றினார்...!
கடைசியாக கடவுள் மனிதனை படைத்து அவனிடம், நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டும் தான். உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன் கையில் தான் உள்ளது. உனக்கு நான் 20 வருடங்கள் வாழ்வதற்காக கொடுக்கிறேன். உனக்கு முன்பு நான் படைத்த கழுதைக்கு 50 வருடங்கள் கொடுத்தேன். ஆனால், அது 20 வருடங்கள் போதும் என்றது. அடுத்து நாயை படைத்து 30 வருடங்கள் கொடுத்தேன். ஆனால், அது 15 வருடங்கள் போதும் என்றது. பிறகு குரங்கை படைத்து 20 வருடங்கள் கொடுத்தேன். ஆனால், அதுவும் 10 வருடங்கள் போதும் என்றது. இப்போது உனக்கு 20 வருடங்கள் போதுமா? இல்லை, உன் விருப்பம் என்னவென்று கூறினால், அதனை மாற்றி தருகிறேன் என்று கூறினார்.
அதற்கு மனிதன், எனக்கு 20 வருடங்கள் என்பது ரொம்ப குறைவு, அதனால், எனக்கு கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும், குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு என்றார்.
அதனால் கடவுளும், மனிதனின் ஆசையை நிறைவேற்றினார்...!
அதன்பிறகு, அன்று முதல் மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான். அடுத்து திருமணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லா சுமைகளையும் தாங்கிக்கொண்டு அல்லும், பகலும் உழைக்கிறான்.
குழந்தைகள் வளர்ந்தபிறகு அடுத்த 15 வருடங்களுக்கு வீட்டிற்கு நாயாக இருந்து அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். வயதாகி, சுநவசைந ஆன பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் சென்று பேரகுழந்தைகளுக்கு வித்தைகளை காட்டி மகிழ்வித்து மரணமடைகின்றான்...
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக