இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இப்பூவுலகில் அழகு, ஆச்சரியம், அதிசயம், மர்மம், புதிர் என ஏராளமான விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன. இந்த இயற்கை நமக்கு எப்போதும் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. அதேசமயம் ஆச்சரியம் நிறைந்ததாகவும் இருக்கிறது.சலசலவென நீர் நிறைந்து ஓடும் ஆறு எப்படி இருக்கும்? பாறை, கற்களின் மீது தெளிந்த நீரோடையாகவும், கூழாங்கற்கள், மணல் நிறைந்த அடிப்பாகம் கொண்டதாகவும் இருக்கலாம். தண்ணீரின் நிறமற்ற தன்மையே ஆற்றின் தன்மையை தீர்மானிக்கும்.
பொதுவாக, தண்ணீர் நிறமற்ற தன்மையையே கொண்டிருக்கும். இந்த ஆறோ வானவில் வண்ணங்களில் பளீரென்று கலர்கலர் வர்ணஜாலம் காட்டுகிறது. அது எந்த ஆறு என்று எல்லோரும் வியப்புடன் இருக்கிறீர்களா? வாங்க வர்ணஜால ஆற்றை பற்றி இங்கு பார்க்கலாம்.
எங்கிருக்கிறது இந்த வர்ணஜால ஆறு?
கொலம்பியா நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்று இந்த 'கேனோ கிறிஸ்டெல்ஸ்" என்னும் வர்ணஜால ஆறு.
உள்ள ர்வாசிகள் இதனை 'ஐந்து வண்ண ஆறு", 'பளிங்கு ஆறு", மற்றும் 'திரவ வானவில்" என்றும் செல்லமாக அழைக்கின்றனர்.
உலகின் அழகான ஆறுகளில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது இந்த கேனோ கிறிஸ்டெல்ஸ்.
இந்த ஆறு ஆண்டில், ஏறக்குறைய ஆறு மாதங்களுக்கு மற்ற ஆறுகளைப்போல்தான் காட்சியளிக்கின்றது.
ஆனால், ஜூனிலிருந்து, டிசம்பர் மாத துவக்கம் வரை சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், வெளிர்கருப்பு ஆகிய நிறங்கள் உட்பட வானவில் வண்ணங்களை கொண்டு, இது பாய்ந்தோடும் இயற்கை அழகை, கண்கொள்ளாக் காட்சியை வேறெங்கும் காண முடியாது.
62 மைல் நீளத்தைக் கொண்டுள்ள இந்த ஆறு, தனது வழித்தடங்களில், பல்வேறு வட்டவடிவ அமைப்புகள், பாறைகளில் துளைகள், அருவிகள், வேகமான நீர்சுழற்சிகள் போன்றவற்றை கொண்டிருப்பது அழகிலும் அழகுதான்.
பல வண்ண நிறங்களுக்கு காரணம் :
ஆற்றில் ஓடும் நீர் சுத்தமான தண்ணீர் என்றாலும், ஆற்றில் அழகாக காட்சித்தரும் நிறம், இந்த ஆற்றுப்படுகையில் வளரும் மெகர்னியா க்ளாவிக்ரா (அயஉயசநnயை உடயஎபைநசய) எனப்படும் பாசி வகையைச் சேர்ந்த நீர்த்தாவரத்தின் நிறமாகும்.
நீரின் ஓட்டம் மற்றும் வெளிச்சத்திற்கு ஏற்றவாறு இந்த தாவரம் வௌ;வேறு வண்ணங்களைப் பிரதிபலிக்கிறது.
தற்காலத்தில் சுற்றுலாப்பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் சுற்றுலாத்தலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது இந்த கேனோ ஆற்றுப்பிரதேசம்.
இயற்கை, இறைவன் மனிதகுலத்திற்கு அளித்த மாபெரும் கொடை இந்த கேனோ கிறிஸ்டெல்ஸ்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக