இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சுப்த
என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு 'படுத்த நிலை' என்று பொருள். மேலே கூறியுள்ள
வஜ்ராசனத்தில் பின்பக்கமாக சாய்ந்து படுத்து இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். எனவே
இதற்கு சப்த வஜ்ராசனம் என்று பெயர்.
செய்முறை:
- முதலில் மேலே கூறியுள்ளவாறு வஜ்ராசனத்தில் அமர வேண்டும்.
- முழங்கால்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிய நிலையில் இருக்க வேண்டும்.
- குதிகால்கள் பக்கவட்டில் திருப்பி புட்டம் தரையில் படும்படி இருக்க வேண்டும்.
- பின் இதே நிலையில் மெதுவாக பின் புறமாக சாய்ந்து படுக்க வேண்டும்.
- சாய்ந்து படுத்த நிலையில், மூச்சை நன்கு இழுத்துக்கொண்டே கைகள் இரண்டையும் தலைக்கு மேலே விரல்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்திருக்கும் நிலையில் வைக்க வேண்டும்.
- உள்ளங்கைகள் வெளிப்புறத்தை பார்த்தவாறு இருக்க வேண்டும்.
- இந்த நிலையில் மூச்சை நன்கு ஆழ்ந்து இழுத்து வெளி விடவும்.
- இதே நிலையில் உங்களால் எவ்வளவு நேரம் இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் இருக்கலாம்.
- முதலில் சிரமமாக தோன்றினாலும் தினமும் செய்து வர மிக சுலபமாக இந்த ஆசனத்தை செய்ய இயலும்.
பலன்கள்:
- மார்புப் பகுதி நன்றாக விரிவடைகிறது.
- தட்டை பாதம் (Flat Foot) குறைபாட்டை சரிசெய்ய இந்த ஆசனம் உதவும்.
- அடி முதுகுப்பகுதி நன்றாக நீட்டப்படுவதால் அப்பகுதியில் உள்ள இறுக்கத்தை குறைக்கிறது.
- தொடர்ந்து நிண்டு கொண்டே வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கிறது.
- இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வர பெருவயிறு தட்டையாக்கப்படுகிறது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக