Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 17 ஜூலை, 2019

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்- திருநெல்வேலி.


Image result for அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்- திருநெல்வேலி.


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

மூலவர் : அகத்தீஸ்வரர்.

உற்சவர் : அகத்தியர்.

பழமை  : 500-1000 வருடங்களுக்கு முன்பு.

ஊர்  : அம்பாசமுத்திரம்.

மாவட்டம் : திருநெல்வேலி.

தல வரலாறு :

ஒரு காலத்தில் கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது, பூமியை சமப்படுத்த அகத்தியர் தென்திசை நோக்கி வந்து கொண்டிருந்தார். பொதிகை மலைக்குச் செல்லும் வழியில் அவர், பல இடங்களில் சிவபூஜை செய்தார். இவ்வூரிலுள்ள காசிபநாதரை பூஜித்துவிட்டு, பொதிகை மலைக்கு கிளம்பினார். அப்போது அவருக்கு பசி எடுத்தது.

அவ்வேளையில் அகத்தியரை தரிசிக்க சிவபக்தர் ஒருவர் வந்தார். அவரிடம் தனக்கு அமுது படைக்கும்படி அகத்தியர் கேட்டார். சிவபக்தர் தன் இருப்பிடத்திற்கு சாப்பிட அகத்தியரை அழைத்தார். ஆனால், அகத்தியர் அவரிடம் ஒரு புளியமரத்தடியில் காத்திருப்பதாகச் சொல்லிவிட்டார்.

சிவபக்தரும் அன்னம் எடுத்து வரச் சென்றார். அவர் வருவதற்கு தாமதமாகவே, அகத்தியர் சாப்பிடாமலேயே பொதிகை மலைக்குச் சென்று விட்டார். அதன்பின் சிவபக்தர் சாதமும், அரைக்கீரையையும் சமைத்து எடுத்து வந்தார். அகத்தியர் சென்றதைக் கண்ட அவர், அகத்தியர் உணவை சாப்பிடாமல் தான் இருப்பிடம் திரும்பமாட்டேன் என சபதம் கொண்டார். அகத்தியரை வேண்டி தவமிருந்தார்.

சிவபக்தரின் பக்தியை மெச்சிய அகத்தியர் அவருக்கு காட்சி கொடுத்து, அன்ன அமுது சாப்பிட்டார். இந்நிகழ்வு நடந்த இடத்தில் சிறிது காலம் கழித்து அகத்தியருக்கு கோவில் எழுப்பப்பட்டது. சிவனின் அருள் பெற்றவர் என்பதால் அகத்தீஸ்வரர் என்னும் பெயர் இக்கோவிலுக்கு ஏற்பட்டது.

தல பெருமை :

இக்கோவிலில் உற்சவர் அகத்தியர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் வலது கையில் நடு விரல்கள் இரண்டையும் மடக்கி, பக்தர்களை அழைத்த கோலத்தில் காட்சி தருவது இதன் சிறப்பம்சமாகும்.

பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன் :

இக்கோவிலில் திருமணத்தடை நீங்கவும், செயல்களில் வெற்றி கிடைக்க வேண்டிக்கொள்கிறார்கள். அகத்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினால் நன்மை உண்டாகும்.

திருவிழா :

பங்குனியில் பிரம்மோற்சவம் நடைபெறும். மேலும் ஆனியில் வருஷாபிஷேகம், நவராத்திரி, திருக்கார்த்திகை, திருவாதிரை மற்றும் சிவராத்திரி ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெறும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடை திறந்திருக்கும்.

முகவரி :

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,
அம்பாசமுத்திரம் - 627 401,
திருநெல்வேலி மாவட்டம்.
போன் :   91 - 4634 - 250 882.

செல்லும் வழி :

திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ., தொலைவில் அம்பாசமுத்திரம் அருகே அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில், உள்ளது. இக்கோவிலின் அருகிலேயே பேருந்து நிலையம் இருக்கிறது.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக