இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அருவினா அனைவருக்கும் பிடிக்கும். அதுல குளிக்கறதுனாலே ஒரு ஆனந்தம் தான்...நீங்க இதுவரைக்கும் மேலிருந்து கீழ் நோக்கி பாயும் அருவிய பாத்திருப்பீங்க... ஆனா.... கீழிருந்து மேல் நோக்கி பாயும் அருவிய பாத்திருக்கீங்களா?
என்னது... அருவி தலைகீழா பாயுதா?
என்னங்க நம்பவே முடியலையே...?
அட.... ஆமாங்க இந்தியாவிலுள்ள மஹாராஷ்டிரா மாநிலத்தில் தான் தலைகீழாக பாயும் இந்த அதிசய அருவி இருக்கு...
புவி ஈர்ப்பு விசையின் காரணமாக மேல் வீசப்படும் எந்த ஒன்றும் கீழ் நோக்கி வருவது தான் உலக நியதி... அதிலும் நீர்வீழ்ச்சிகள் தாழ்வான பகுதிகளை நோக்கி பாயக்கூடியவை.
ஆனால்.... புனே மாவட்டத்திலுள்ள இந்த அருவி கீழிருந்து மேலாக பாய்கிறது. தலைகீழாக பாயும் இந்த அதிசய அருவி அனைவரையும் பிரம்மிக்க வைக்கிறது.
மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள புனே மாவட்டத்தில் அமைந்துள்ளது சிங்ககாத் மலைப்பகுதி. இந்த மலைப்பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட அருவிகள் உள்ளன.
இதில் ஒன்றுதான் தலைகீழாக பாயும் இந்த அதிசய அருவி.... இது நமது கற்பனைக்கும் எட்டாத அளவில் அமைந்துள்ளது.
இப்பகுதியில் வீசப்படும் காற்று அதிக அழுத்தத்துடன் வீசப்படுவதால் தான் இந்த அருவி கீழிருந்து மேல் நோக்கி பாய்கின்றது.
காற்றின் அழுத்தமே இந்த அருவி தலைகீழாக பாய்வதற்கு காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இப்பகுதியில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அதிக காற்றுடன் கூடிய மழை பொழிகின்றது.
இவ்வேளையில் தான் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து இந்த அருவியை கண்டு ரசித்து மகிழ்கிறார்கள்....
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக