இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தேவையான பொருள்கள்:- அரிசி 2 ஆழாக்கு
- துவரம் பருப்பு 1 கைப் பிடி
- கடலைப் பருப்பு 1 கைப் பிடி
- உளுத்தம் பருப்பு 1 கைப் பிடி
- சீரகம் அரை ஸ்பூன்
- மிளகு 1 ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
- பெருங்காயம் 1 சிட்டிகை
செய்முறை:
- மேலே உப்பைத் தவிர மற்றவற்றை மிஷினில் கொடுத்து ரவை போல் நன்றாக உடைத்துக் கொள்ளவும்.
- இப்போது அவ்வாறு நன்கு ரவை போல உடைத்துக் கொண்டவற்றை ஒரு ஆழாக்கு சரியாக அளந்து ஒரு பாத்திரத்தில் போடவும்.
- அத்துடன் அதே பாத்திரத்தில் அரை ஆளாக்குப் புளிப்பு மோர், 2 ஸ்பூன் தேங்காய்த் துருவல், பெருங்காயம் ஒரு சிட்டிகை, கருவேப்பில்லை (தேவையான அளவு அல்லது சில இலைகள்), இஞ்சி, உப்பு, பச்சை மிளகாய் ஆகிய இவற்றை நன்கு கரைத்து வைத்து இரண்டு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். இப்போது பார்ப்பதற்கு மாவு போல இருக்கும்.
- சுவை பிரியர்கள் தேவைப் பட்டால் வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம்.
- இப்போது ஒரு குழிவான வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு, அது காய்ந்த மாத்திரத்தில் நீங்கள் கரைத்து வைத்திருக்கும் மாவை இரண்டு கரண்டி ஊற்றி ஒரு மூடி கொண்டு வாணலியை மூடி வைக்கவும்.
- ஐந்து நிமிடங்கள் கழித்து மூடியை நீக்கித் தோசையை திருப்பிப் போட்டு இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மறுபடியும் மூடவும்.
- இப்போது இரு பக்கமும் சிறிது சிவக்க வெந்தவுடன் எடுக்கவும். இதோ இப்போது சுவையான தவலை தோசை தயார்.
- மிச்சம் இருக்கும் மாவையும் பிறகு இதே போல பயன்படுத்திக் கொள்ளவும். இப்படியாக இரண்டு நபருக்கு இரண்டு அல்லது மூன்று முறைகளுக்குத் தவலை தோசையை தயாரிக்கலாம்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக