இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
விதவிதமான விளையாட்டுக்களை மொபைல்போனில் மட்டும்தான் விளையாட முடியுமா என்ன? நம் நண்பர்களோடு சேர்ந்து குழுவாகவும் விளையாடலாம்.
இன்று நாம் பார்க்க இருக்கும் விளையாட்டில் குழுவாக விளையாடும் விளையாட்டில் யார் தலைவன்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
எத்தனை பேர் விளையாடலாம்?
பத்திற்கும் மேற்பட்டோர்.
எப்படி விளையாடுவது?
விளையாடும் முதல் போட்டியாளர் சிறிது தூரம் தள்ளிச் சென்று தன் இரு கண்களையும் மூடிக்கொள்ள வேண்டும்.
அதன்பின் பெரிய வட்டம் ஒன்றை போட்டு அதில் போட்டியாளர்கள் அனைவரும் நின்றுக்கொள்ள வேண்டும். அதில் யார் தலைவன் என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது விளையாட ஆரம்பிக்கலாம்.
குழுத்தலைவர் நின்ற இடத்தில் இருந்தப்படியே ஏதாவது ஒரு செயலை செய்ய வேண்டும். உதாரணமாக கைத் தட்டுவது, தலையை சொறிவது என ஏதாவது ஒரு செயலை செய்ய வேண்டும்.
குழுத்தலைவர் செய்வதை போல் மற்ற போட்டியாளர்கள் செய்ய வேண்டும். இப்பொழுது விளையாடும் முதல் போட்டியாளர் வட்டத்தை சுற்றி வந்து இதில் யார் தலைவர் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
குழுத்தலைவர் அடிக்கடி தன் செயலை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அதேபோல் போட்டியாளர்களும் செயலை மாற்ற வேண்டும்.
முதல் பேட்டியாளர் யாரை பார்த்து செயலை மாற்றுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
முதல் போட்டியாளருக்கு மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்படும். அதற்குள் குழுத்தலைவரை கண்டுபிடித்துவிட்டால் அவர் முதல் போட்டியாளராக மாறி ஆட்டத்தை தொடர வேண்டும்.
அவ்வாறு கொடுக்கப்படும் மூன்று வாய்ப்பிலும் முதல் போட்டியாளர், குழுத்தலைவரை கண்டுபிடிக்கவில்லை என்றால் முதல் போட்டியாளர் அவுட் ஆவார்.
இப்பொழுது வட்டத்தில் இருப்பவர்கள் செய்யச் சொல்லும் ஏதாவது ஒரு செயலை அவுட் ஆனவர் செய்ய வேண்டும். உதாரணமாக, நடனம் ஆடுவது, பாடல் பாடுவது.
பலன்கள் :
குழு ஒற்றுமை மேம்படும்.
கூர்ந்து கவனிக்கும் திறன் புலப்படும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக