இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தமிழ்நாட்டில் எவ்வளவோ சுற்றுலாத்தலங்கள் இருந்தாலும், வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் பெருமை வாய்ந்த ஒன்றுதான் ஸ்ரீரங்கம். அப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாத சுவாமி கோவிலின் மகிமையை காண ஒருநாள் போதாது. அந்தளவுக்கு சிறப்புகளும், பாரம்பரியமும் கொண்டுள்ளது இந்த ஸ்ரீரங்கம் கோவில்.
திருச்சியிலிருந்து ஏறத்தாழ 9கி.மீ தொலைவிலும், நாமக்கலில் இருந்து 81கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடம்தான் ஸ்ரீரங்கம்.
சிறப்புகள் :
இந்தியாவிலேயே ஏழு பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டுள்ள கோவில் இதுதான். 'பூலோக வைகுண்டம்" என்ற பெருமை பெற்றதும், வைணவர்களின் 108 வைணவ திருத்தலங்களில் தலைமைச் செயலகம் போல் செயல்படுவதும் இதுதான்.
பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்கள், 'மங்களாசாசனம்" பெற்று பாடிய திருத்தலமாகும்.
ஆன்மீக நோக்கத்துடன் இந்தியா மட்டுமின்றி உலகத்தின் பல இடங்களில் இருந்து ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர்.
இதனால்தான் தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலாத்தலமாக இக்கோவில் மாறிவருகிறது. இந்தக்கோவில் 21 கோபுரம் கொண்டு மிக பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ளது.
'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்பது சான்றோர் வாக்கு. அப்படி பிரம்மாண்டமான 236 அடியில் கட்டப்பட்டுள்ள 'ராஜகோபுரம்" பார்ப்பவர்களை தன் பக்கம் இழுத்துக்கொள்கிறது. மேலும், இந்த ராஜகோபுரம் தங்கத்தினால் செய்யப்பட்டுள்ளது.
ஒருநாள் முழுவதும் நீங்கள் இந்த கோவிலினை சுற்றிப்பார்ப்பது கடினம்தான் அந்தளவுக்கு காண வேண்டிய காட்சிகள் அதிகளவில் இங்கு உண்டு.
குழந்தைகளையும் நாம் அழைத்துச் சென்றால் நம் முன்னோர்களின் ஓவியம் மற்றும் பல நுட்ப திறமைகளை கற்றுக்கொடுக்க முடியும்.
வெளிநாட்டிலிருந்து பல சுற்றுலாப்பயணிகள் இக்கோவிலுக்கு வருகின்றனர். மேலும் இங்குள்ள கடைகளில் நமக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி மகிழலாம்.
எப்படி செல்வது?
திருச்சியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது.
விமானம் வழியாக :
திருச்சி விமான நிலையம்.
ரயில் வழியாக :
திருச்சி ரயில் நிலையம்.
ஸ்ரீரங்கம் ரயில் நிலையம்.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
திருச்சியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்குவதற்கு விடுதி வசதிகள் உள்ளன.
பார்க்க வேண்டிய இடங்கள் :
ஆயிரங்கால் மண்டபம்.
வெள்ளை கோபுரம்.
இதர சுற்றுலாத்தலங்கள் :
திருச்சி மலைக்கோட்டை.
திருவானைக்காவல்.
சமயபுரம்.
குணசீலம்.
முக்கொம்பு.
வயலூர் முருகன் கோவில்.
வெக்காளி அம்மன் கோவில்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக