Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 27 ஜூலை, 2019

இந்தியாவைக் குறிவைக்கும் வாட்ஸ்அப்.. கூகிள், பேடிஎம் கண்ணீர்..!



இந்தியாவைக் குறிவைக்கும் வாட்ஸ்அப்.. கூகிள், பேடிஎம் கண்ணீர்..!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



இந்தியாவில் கடந்த 5 வருடத்தில் டிஜிட்டல் பேமெண்ட் வர்த்தகம் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. இதில் முன்னோடி என்றால் பேடிஎம் தான். வங்கிகளை மட்டுமே நம்பியிருந்த பணப் பரிமாற்றம் வேலெட் சேவை மூலம் பேடிஎம் வெற்றிக் கண்டது, இந்த வெற்றிக்கு மோடி அரசின் பணமதிப்பிழப்பு முக்கிய பங்காற்றியது.


இப்படி இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் துறையில் கொடிகட்டிப் பறந்த பேடிஎம், கூகிள் நிறுவனத்தின் tez அறிமுகம் செய்யப்பட்ட போது ஒரு சரிவைக் கண்டது, அதன் பின் கூகிள் இந்தச் செயலியை ரீபிராண்டிங் செய்து கூகிள் பே என்ற பெயரில் அறிமுகம் செய்து பேடிஎம் நிறுவனத்திற்குக் கடுமையான போட்டியாக விளங்கியது.

எரியும் எண்ணெய் ஊற்றுவது போல், இத்துறையில் போட்டியை அதிகரிக்கப் பேஸ்புக் களமிறங்கியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் வாட்ஸ்அப், ஏற்கனவே பல நாடுகளில் தனது பேமெண்ட் சேவையை அறிமுகம் செய்து வெற்றி கண்ட நிலையில், தற்போது இந்தியா வர உள்ளது.

இந்தியாவில் சுமார் 40 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இச்சேவையைக் கொடுக்க முடிவு செய்துள்ளது. தற்போது வெறும் சோதனை தளத்தில் மட்டுமே இருக்கும் வாட்ஸ்அப் பேமெண்ட் சேவை இனி எல்லோருக்கும் கிடைக்கும்.

வாட்ஸ்அப்-இன் இந்த முடிவு பேடிஎம்-க்கும், கூகிள் நிறுவனத்திற்கு மத்தியில் மிகப்பெரிய போட்டி உருவாக உள்ளது. இதனால் இந்திய டிஜிட்டல் பேமெண்ட் சேவையில் மாபெரும் போட்டி உருவாகும் எனத் தெரிகிறது. இதனால் மக்களுக்குத் தான் அதிகப்படியான லாபம். இனி கூகிள் பே-வில் Better Luck Next Time வராமல் பணம் கிடைக்கும்.




என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக