Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 3 ஜூலை, 2019

உஷரா இருங்க: கூகுளில் மறைந்து உங்கள் பணத்தை அபேஸ் செய்யும் சைபர் கொள்ளையர்.!

போலி எண்கள் இதுதான்:  
 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

கூகுளில் வழியாக சைபர் கொள்ளையர்கள் மறைந்து இருக்கின்றனர். இவர்கள் கூகுளில் எங்கு தேடினாலும் வாடிக்கையாளர்கள் சேவை எண் என்று பதிவிட்டுள்ளனர் சைபர் கொள்ளையர்கள். உஷரா இருங்க:

ககூகுள் பே, போன் பே உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் வழியாக பண பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்கள் ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். அப்போது அவர்கள் கூகுளில் சென்று தேடுகின்றனர். சைபர் கொள்ளையர்கள் பதிவிட்டுள்ள எண்களை தொடர்பு கொண்டு இது உண்மையான வாடிக்கையாளர் சேவை மையம் என எண்ணி வசமாக சிக்கி கொள்கின்றனர்.

சிறிது நேரத்தில் இவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் அபேஸ் ஆவது தான் மிச்சம். இதில் ஏமாந்த ஒருவர் குறித்து விரிவாக காணலாம்.


டிஜிட்டல் பேமெண்ட் முறை:

கூகுள் பே, போன்பே, அமேசான் பே, பேடிஎம் உள்ளிட்ட வால்ட்களை பொது மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது சிறிய பெட்டி கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரைக்கும் இந்த நடைமுறை அமலில் இருக்கின்றது. இதை வைத்து தினமும் அன்றாட தேவைக்களுக்காக பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

 இந்த வழியில் தான் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கூகுள் பே சேவை மைய எண்: கூகுள் பே சேவை மைய எண்: சென்னையை சேர்ந்த பள்ளி ஆசிரியை பவுலின் என்பவர் தனது செல்போனிலுள்ள கூகுள் பே செயலி மூலம் அனுப்பிய ரூ.1000 பரிவர்ததனை ஆகவில்லை. இதையடுத்து கூகுள் பே சேவை மைய எண்ணை கூகுளிள் தேடியுள்ளார்.

கூகுளில் கிடைத்த போலியான எண்ணை அதிகாரபூர்வ சேவை எண் கருதி தொடர்பு கொண்டுள்ளார்.



மோசடி நபருடன் பேச்சு:
அங்கு காலில் பேசியவருடன் மோசடி நபர், பவுலின் செயலியில் பதிவு செய்துள்ள எண்ணை வைத்து செல்போன் எண்ணை மட்டும் வாங்க அதை மோசடி நபரின் கூகுள் பே செயலியில் பதிவிட்டு அதன் மூலம் அவரது வங்கி கணக்கு விபரங்களையும் எடுத்துள்ளார்.

அனைத்து விவரங்களையம் எடுத்து வைத்து கொண்டு, தற்போது தங்களது செல்போனுக்கு ஒரும் ஓடிபி எண்ணை கூறினாரல் கணக்கில் டபித்தம் செய்ப்பட்ட தொகை திருப்பதி செலுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

ரூ.50 ஆயிரம் அபேஸ் ஆனது:
இதை நம்பி ஓடிபி எண்ணை தெரிவித்த ஆசிரியை பவுலினின் கணக்கில் இருந்து அடுத்தடுத்து சிறு சிறு தொகையாக ரூ.50 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளது மோசடி கும்பல். இதே பாணியில் பல்வேற பரிவர்த்தனை செயலிகளின் பேரில் போலி சேவை எண்ண கொடுத்து லட்சகண்கில் மோசடி செய்துள்ளார் என்கிறார் வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார்.

போலி எண்ணை நீக்க முடியாமல் போலீஸ்:
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 10 புகார்களாவது பதிவாகிறது. மேலும், கூகுளில் பதிவாகியுள்ள இது போன்ற போலி சேவை எண்களை நீக்குவதற்கான அனுமதியை காவல் துறையினருக்கு வழங்காததால், போலி எண்கள் நீக்கப்படாமல் இருக்கின்றன.

இதனால் வாடிக்கையாளர்கள் உண்மையான சேவை மைய எண்கள் என நம்பி இந்த மோசடியில் வலையில் சிக்கிக்கொள்வதை தடுக்க முடியவில்லை என்கின்றனர் காவல் துறையினர்.

போலி எண்கள் இதுதான்:
அதேவேளையில் வாடிக்கையாளர்கள் சேவை எண் 10 இலக்கங்களை கொண்ட செல்போன் எண்களாக இருந்தால் அவற்றை தொடர்புகொள்ள கூடாது என எச்சரிக்கும் போலீசார், சம்மந்தபட்ட நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களின் சேவை எண் போலியாக இருப்பதை கவனித்தால் அதை நீக்க நடவடிக்கை எடுப்பதோடு, வாடிக்கையாளர்களுக்கு தங்களது சேவை எண் எளிய வகையில் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர்.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக