இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கோடைகால விடுமுறை என்றாலே நம் நினைவுக்கு வருவது சுற்றுலாதான். அதுவும் குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று என்றால் தண்ணீர்தான். கோடைகாலத்தில் நீரில் விளையாடுவது என்பது அனைவருக்குமே பிடித்தமான ஒன்று.
நீங்கள் குழந்தைகளுடன் பயணித்தால், அவர்களுக்காக நேரம் செலவிடுவதையும் கருத்தில் கொள்ளுங்கள். சில சமயங்களில் நீங்களே குழந்தையாய் மாறி குதூகலிக்க விரும்பினால் பிளாக் தண்டர் கேளிக்கை பூங்காவிற்கு செல்லலாம்.
மேட்டுப்பாளையம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது கேளிக்கைப் பூங்காவான டீடயஉம வுhரனெநச தான்.
இப்பூங்கா கோயம்புத்தூரிலிருந்து ஏறத்தாழ 38கி.மீ தொலைவிலும், ஈரோட்டிலிருந்து ஏறத்தாழ 102கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. உண்மையில் இது சிறந்த பொழுதுபோக்கிற்கான இடமாக இருக்கும்.
சிறப்புகள் :
அனைத்து சுற்றுலாப்பயணிகளையும் அதிகமாக ஈர்க்கும் இடங்களில் இதுவும் ஒன்று. குழந்தைகளுக்கான நீச்சல் குளம், காற்றாற்றுப் பயணம், படகு சவாரி மேலும் பல தண்ணீர் விளையாட்டுகள் உள்ளன.
அதுமட்டுமில்லாமல் ராட்சத ராட்டினங்களும், மலைச்சறுக்கு, வன ஆற்றுச் சவாரி போன்றவை குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.
இங்கு உணவகமும் உள்ளது. வேண்டிய உணவுகளை பூங்காவிற்கு உள்ளேயே வாங்கிக் கொள்ளலாம். சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்றவாறு பாதுகாப்பு உபகரணங்களுடன் விளையாடும் வசதிகளும் உண்டு.
குடும்பத்துடன் சென்றுவர மிகச்சிறந்த இடமாக இவ்விடம் திகழ்கிறது. வயது வேறுபாடின்றி அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க ஏற்ற இடம்.
மேலும் அங்கு அமைந்துள்ள செயற்கை அருவியில் குளித்து மகிழலாம். குழந்தைகளுடன் விளையாடுவது என்றால் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று.
ராட்சத ராட்டினத்தில் ஏறி சுற்றும்போது இயற்கையின் அழகை கண்டு ரசிக்க முடியும். விடுமுறை நாட்களிலும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குறையாமல் இருந்து கொண்டே இருக்கும்.
எப்படி செல்வது?
கோவை மற்றும் மேட்டுப்பாளையத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது.
விமானம் வழியாக :
கோவை விமான நிலையம்.
ரயில் நிலையம் :
மேட்டுப்பாளையம் ரயில் நிலையம்.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
கோவை, மேட்டுப்பாளையத்தில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளது.
பார்க்க வேண்டிய இடங்கள் :
செயற்கை அருவி.
நீச்சல் குளம்.
ராட்டினங்கள்.
இதர சுற்றுலாத்தலங்கள் :
வெள்ளியங்கிரி மலை.
வால்பாறை.
மருதமலை.
ஆணைமுடி.
சிறுவாணி அணைக்கட்டு.
கோவைக் குற்றாலம்.
வ.உ.சி. பூங்கா.
ஊட்டி.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக