இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பொதுவாக கோவில்கள் என்றாலே அர்ச்சனை, அபிஷேகம், நைவேத்தியம் என பல வகையான சிறப்பு ஆராதனைகள் செய்யப்படும். அதில் கடவுளுக்கு நைவேத்தியமாக பழங்கள், உணவை படைப்பது நம்முடைய வழக்கம்.
ஆனால் இந்த ஒரு கோவிலில் மட்டும் உணவு, பழங்களையெல்லாம் தாண்டி ஆவியை நைவேத்தியமாக படைக்கின்றனர். அப்படி இந்த கோவிலில் என்னென்ன சிறப்புகள் இருக்கிறது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் வட்டத்தில், வெள்ளாற்றங்கரையில் ஆவுடையார் கோவில் எனும் திருப்பெருந்துறை திருத்தலம் அமைந்திருக்கிறது. புதுக்கோட்டையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் இத்திருத்தலம் உள்ளது. இக்கோவிலில் மூலவராக ஆத்மநாதசுவாமி, ஆவுடையாரும், தாயாராக யோகாம்பாளும் அருள்பாலித்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் அன்னத்தின் ஆவியே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இக்கோவில் திருப்புகழ் பெற்ற ஆலயம் என ஈடு இணையில்லாப் பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது.
பெரிய பாத்திரம் ஒன்றில் சாதத்தை சுட சுட சமைத்து பின் அந்த சாதத்தை மூலஸ்தானத்தில் உள்ள அமுது மண்டபத்தில் இருக்கும் ஒரு பெரிய திட்டுக்கல் (அமுத படைக்கல்) மீது கொட்டிவிட்டு, அதனுடன் முளைக்கீரை, பாகற்காயும் அதைச்சுற்றி தேன்குழல், அதிரசம், அப்பம், வடை முதலானவை வைத்து கதவை மூடி நைவேத்தியம் செய்யப்படுகிறது. இங்கு ஆறுகால பூஜைகளும் நேர்த்தியாக நடைபெறுகிறது.
அந்த அன்னத்தில் இருந்து வரும் ஆவியே நைவேத்தியமாக கருதப்படுவதாக கூறப்படுகிறது. சுமார் 3 அடி உயரம் 7 அடி நீளம் 6 அடி அகலம் கொண்ட அமுத படைக்கல்லில் புழுங்கல் சாதம் படைக்கப்படுகிறது.
பொதுவாக மற்ற கோவில்களில் பச்சரிசி கொண்டே அன்னம் சமைத்து இறைவனுக்கு படைப்பது வழக்கம். ஆனால் இங்கு மட்டுமே புழுங்கல் அரிசி கொண்டு அன்னம் சமைத்து இறைவனுக்கு படைக்கப்படுகிறது.
இங்குள்ள இறைவனுக்கு தினமும் 6 கால பூஜைக்கு அமுதம் படைப்பதால் அன்னத்தை சமைக்க பயன்படும் அடுப்பானது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அணைந்ததே இல்லை என்று கூறப்படுகிறது.
ஆவுடையார் கோவிலின் கருவறை விதானத்தில் 21,600 செப்பு ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன. இது ஒரு நாளைக்கு ஒரு மனிதன் 21,600 முறை மூச்சு விடுவதை குறிப்பதாக உள்ளது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக