இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கிராமப்புற விளையாட்டுக்கள் குழந்தைகளுக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதாக இருக்கின்றது.
சில விளையாட்டுகளை விளையாடினாலே போதும் உடற்பயிற்சிகள் ஏதும் செய்யாமல் உடலினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். அப்படிப்பட்ட விளையாட்டுகளில் ஒன்றுதான் கொக்கு பற...பற... கோழி பற...பற..
எத்தனை பேர் விளையாடலாம்?
எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
இந்த விளையாட்டுக்கான தலைவரை முதலில் தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும்.
முதலில் விளையாடுபவர்கள் அனைவரும் வட்டமாக உட்கார்ந்தோ அல்லது நின்று கொண்டோ விளையாடலாம்;.
இந்தப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட தலைவர் வட்டத்திற்கு நடுவில் நின்று கொள்ள வேண்டும்.
தலைவர் கொக்கு பற... பற... என்று சொன்னவுடன் விளையாடும் அனைவரும் பறவையை போல தனது இருக்கைகளையும் பறப்பது போல அசைக்க வேண்டும்.
பறவைகளின் பெயர்களைச் சொல்லி, 'பற... பற..." என்று சொல்ல, அனைவரும் தனது கையை அசைக்க வேண்டும். இப்படி வேகமாக விளையாடிக் கொண்டிருக்கும்போதே, திடீரெனத் தலைவர் 'நாய் பற... பற..." என்று சொல்ல, அனைவரும் கை அசைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாமல் பறவையை போல கை அசைத்தால் அவர் 'அவுட்". நாய் பறக்குமா, என்ன?
இதேபோல் தேங்காய் என்றால் உட்கார வேண்டும்.
தென்னைமரம் என்றால் எழுந்து நிற்க வேண்டும்.
வடை என்றால் கைகளை வடை தட்டுவது போல் தட்ட வேண்டும்.
டீ அல்லது காபி என்றால் காபி குடிப்பது போல சைகை செய்ய வேண்டும்.
இப்படி விளையாடிக்கொண்டிருக்கும் போது தலைவர் சிலை என்று கூட சொல்வார். அப்போது அனைவரும் சிலைபோல அசையாமல் நிற்க வேண்டும்.
நாம் சிலையாக நிற்கும்போது தலைவர் வந்து நமக்கு சிரிப்பு காட்டுவார், சோதனைகள் செய்வார். என்ன செய்தாலும் நாம் நிற்கும் நிலையிலிருந்து மாறாமல் அப்படியே நிற்க வேண்டும்.
பின் அவர் வேறு ஏதேனும் ஒன்றை சொல்லும் வரை சிலை போலவே நிற்க வேண்டும். மீறி அசைந்தால் அவர் 'அவுட்".
இப்போது, 'அவுட்" ஆனவர் தலைவராக நின்று, இந்த விளையாட்டை நடத்த வேண்டும்.
பயன்கள் :
உடல் வலிமை மேம்படும்.
மூளையின் செயல்பாடு துரிதமாகும்.
கூர்ந்து கேட்கும் திறன் அதிகரிக்கும்.
எடுக்கும் முடிவில் நிலையாக இருக்கும் திறன் மேம்படும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக