இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஃபுல்ஜார்
சோடா-வைப் போல் தந்தூரி டீ தற்போது பிரபலமாகி வருகிறது. நெருப்பில் வாட்டி
எடுக்கப்படும் தந்தூரி சிக்கன், தந்தூரி ரொட்டி உள்ளிட்டவற்றை சுவைத்து இருப்போம்.
அது என்ன தந்தூரி டீ..? என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
கூல்
ட்ரிங்ஸ் பிரியர்களுக்கு ஃபுல்ஜார் சோடா என்றால், தேனீர் பிரியர்களை தந்தூரி டீ
கட்டி வைத்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த அர்சுணன் என்பவரது தேனீர் கடையில்
கூட்டம் அலைமோதிய நிலையில், அப்படி என்ன நடக்கிறது அங்கே என பார்த்த போது தான்,
தந்தூரி டீ-யின் சுவையை அறிய முடிந்தது.
வெறும் நெருப்பில் வாட்டி எடுக்கப்படுவதையே
தந்தூரி என்பார்கள். அந்த வகையில் தேனீரை எப்படி நெருப்பில் வாட்ட முடியும் என்று கேட்டபோது,
தந்தூரி டீயை போட்டுக் காட்டினார் உரிமையாளர் அர்சுணன். தகதகிக்கும் நெருப்பில் சிறிய
வடிவிலான மண் பானைகள் சுட வைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து ஒரு மண் பானையை எடுத்து, சூடு
தணிவதற்கு முன்பே, அதில் சூடான தேனீரை நிரப்ப, அது அப்படியே பொங்கி வழிகிறது. அதை அப்படியே
வேறொரு மண் குவளைக்கு மாற்றி விற்பனை செய்யப்படுகிறது.
தந்தூரி டீ-யை மண் குவளையில்
குடிப்பதால் தேனீரின் சுவை இன்னும் கூடுவதாகவும், பிளாஸ்டிக் கோப்பைகளை தவிர்க்க மண்
குவளை சிறந்த மாற்றாக இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். திருச்சி,
தூத்துக்குடியை தொடர்ந்து பல்வேறு இடங்களில் தந்தூரி டீ பிரபலமாகி வருகிறது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக