இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளதுதான் பழனி. திண்டுக்கல்லில் இருந்து ஏறத்தாழ 57 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படைவீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலாகும்.
சிறப்புகள் :
இந்த தலம் பழனி என அழைக்கப்படுவதற்கு காரணம் சிவனும், பார்வதியும் தங்கள் மகன் முருகப்பெருமானை 'ஞானப் பழம் நீ" என அழைத்ததால், 'பழம் நீ" என வழங்கப்பெற்று, பின்னர் அதுவே 'பழனி" ஆகிவிட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.
இந்தக் கோவில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் தலத்தின் மூலவர் நவபாஷானத்தால் ஆனவர்.
இத்தலத்தில் அலகு குத்துதல், காவடி எடுத்தல், முடிகாணிக்கை, பால்குடம் எடுத்து வருதல் என பல்வேறு பிரார்த்தனைகள் நிறைவேற்றப்படுகிறது. தமிழகத்தின் முக்கிய பிரார்த்தனை தலமாகும்.
முருகன் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வந்து நின்ற தலம் என்பதால் பழனி மலையடிவாரத்தில் உள்ள திருஆவின்குடி தலமே முருகனின் மூன்றாம்படை வீடு என அழைக்கப்படுகிறது.
இந்தக் கோவிலில் வழங்கப்படும் பழனி பஞ்சாமிர்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பழனி பஞ்சாமிர்தம் பக்தர்கள் மத்தியில் விஷேச பிரசாதமாக விளங்குகிறது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் ஆகிய விழாக்கள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தைப்பூசம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்து இந்தக் கோவிலுக்கு வந்து செல்வதை வரமாக கொண்டுள்ளனர். இந்த கோவிலில் தங்கத்தேர் வழிபாடு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
சுற்றுலாப் பயணிகள் மலைக்கோவிலைச் சுற்றிப் பார்க்க, தமிழக அரசு ரோப் கார் வசதி செய்துள்ளது. சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள், மலையடிவாரத்திலிருந்து மலை உச்சியிலுள்ள முருகன் கோவிலுக்கு இந்த ரோப் காரைப் பயன்படுத்தி வருகின்றனர்.
எப்படி செல்வது?
திண்டுக்கல்லில் இருந்து பழனிக்கு பேருந்து வசதி உள்ளது.
விமானம் வழியாக :
கோவை விமான நிலையம்.
மதுரை விமான நிலையம்.
ரயில் வழியாக :
திண்டுக்கல் ரயில் நிலையம்.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
கோவில் சார்பில் தங்குவதற்கு விடுதி வசதிகள் உள்ளது. மேலும் வெளியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்குவதற்கு விடுதிகள் உள்ளன.
பார்க்க வேண்டிய இடங்கள் :
திருஆவின்குடி ஆலயம்.
இடும்பன் ஆலயம்.
சரவண பொய்கை.
வரதமனதி அணை.
இதர சுற்றுலாத்தலங்கள் :
கொடைக்கானல்.
சண்முகா நதி.
பாலாறு, பொருந்தலாறு அணை.
அயிரை மலை(ஐவர் மலை) சமணப் பள்ளி.
குதிரை ஆறு அணை.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக