இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அய்யங்கார்குளம் என்ற ஊரில் தான் இந்த அதிசய கோவிலுள்ளது. இந்த ஊரிலிருக்கும் பிரபலமான, கிருஷ் ணதேவராயரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மிகப் பழமையான ஆஞ்சநேயர் கோவில் தான் அது.
காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு செல்லும் வழியில் காஞ்சியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் இருக்கிறது கலவை கிராமம். இங்குதான் சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. முன்புறத்தில் நெடிதுயர்ந்த தூண்களுடன் காட்சி தரும் இந்தக் கோவில் உள்ளது.
இந்தக் கோவிலுக்கு முன்னால் இருக்கும் குளக்கரையின் வடக்குப் பகுதியில் வாவிக் கிணறு ஒன்று உள்ளது. கிணற்றுக்குள் செல்ல படிகள் உள்ளன. கீழே சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கருங்கல்லில் அமைந்த பதினாறு கால் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அபூர்வமான அமைப்பு இது.
மிக அற்புதமான கலை அம்சம் நிறைந்த வேலைப்பாடுகளுடன் கூடிய பெருமாள் கோவில் பூமிக்கடியில் உருவாக்கப்பட்டு, அதற்குள் அழகிய மண்டபமும் உள்ளது. அதன் நடுவே தான் வாவிக் கிணறு உள்ளது.
இந்த கிணற்றில் உள்ள ஊற்று வருடம் முழுவதும் பெருக்கெடுத்து வருகிறது. அதனால் இந்த கோவில் எப்போதும் தண்ணீராலேயே நிரம்பிக் காணப் படுகிறது. சித்ரா பௌர்ணமித் திருவிழாவிற்காக இந்த தண்ணீரை வெளியேற்றி விடுவார்கள். விழா நாளில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் உற்சவராக வருவார்.
அவர் பல்லக்கில் வந்து இந்த வாவிக் கிணற்றுக்குள் இருக்கும் மண்டபத்திற்குள் எழுந்தருள்கிறார். லட்சக் கணக்கான மக்கள் இந்த அதிசயக் கிணற்றுக் கோவிலின் திருவிழாவிற்காக வருகிறார்கள். விழா முடிந்து ஒரு வாரம் கழித்து மீண்டும் தண்ணீர் நிரம்பத் துவங்கி விடும். இந்த நீரை முறையாகப் பாசனத்திற்கு ஏற்றம் மூலம் இறைத்துப் பயன்படுத்துகிறார்கள்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக