Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 18 ஜூலை, 2019

அருள்மிகு சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோவில் சேலம்.

 Image result for அருள்மிகு சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோவில் சேலம்.

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



மூலவர் : சாம்பமூர்த்தீஸ்வரர்.

தல விருட்சம் : வில்வ மரம்.

பழமை : 500 முதல் 1000 வருடங்களுக்கு முன்பு.

ஊர் : ஏத்தாப்பூர்.

மாவட்டம் : சேலம்.

தல வரலாறு :

முன்னொரு காலத்தில் சிவபெருமானுக்கு அழைப்பு விடுக்காமல், தட்சன், தன்னலம் கருதி ஒரு யாகம் நடத்தினான். அந்த யாகத்திற்கு செல்ல வேண்டாம் என அம்பாளிடம், சிவபெருமான் சொல்லியிருந்தும் அவர் மனம் பொறுக்காமல் சென்று விட்டார். இந்த செயலால் சிவபெருமான் கோபம் கொண்டார். தனித்திருந்த அவர், மன அமைதி வேண்டி இத்தலத்தில் தங்கினார். அம்பாள், சிவபெருமானின் கோபம் தணிக்க வேண்டி தனது அண்ணன் மகாவிஷ்ணுவுடன் வந்து சுவாமியை வணங்கி தவமிருந்தார். பின் அங்கிருந்த வில்வ மரத்தின் அடியில் சிவபெருமான் காட்சி அளித்து அம்பாளை மன்னித்தார். ஆகையால் இக்கோவிலிற்கு சாம்பமூர்த்தீஸ்வரர் எனப் பெயர் ஏற்பட்டது.

தல பெருமை :

இக்கோவிலில், இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மாசி மாத முதல் வாரத்தில் லிங்கத்தின் மீது சூரியன் நேரே தனது ஒளியைப் பரப்புகிறார். அதுவே இதன் சிறப்பாகும்.

பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன் :

இத்தல இறைவனை வணங்கிட குடும்பப் பிரச்சனைகள் மற்றும் நோய்கள் தீரும், நினைத்த செயல்கள் நடக்கும். மேலும், அங்கு இருக்கும் சதுர்வேத லிங்கங்களை வணங்கிட கல்வியில் சிறந்து விளங்கலாம். பிரிந்துள்ள தம்பதியர்கள் இம்மரத்தை சுற்றி வந்து சுவாமியை வணங்கினால் ஒற்றுமையாக வாழ்வார்கள்.

திருவிழா :

தை மாதத்தில் பிரம்மோற்சவம் மற்றும் பவுர்ணமி பூஜை நடைபெறுகிறது.

திறக்கும் நேரம்:

காலை 9.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும்.

முகவரி :

அருள்மிகு சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோவில்,
ஏத்தாப்பூர் - 636 117,
சேலம் மாவட்டம்,
போன் :  91- 4282 - 270 210.

செல்லும் வழி :

சேலம் மாவட்டத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் 37 கி.மீ., தொலைவில் ஆத்தூர் அருகிலுள்ள புத்திரகவுண்டன் பாளையத்தில் இருந்து ஒரு சாலை பிரிகிறது. அங்கிருந்து 1 கி.மீ., தூரத்தில் இக்கோவில் உள்ளது. சேலம் மற்றும் ஆத்தூரில் இருந்து பேருந்துகள் உள்ளன.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக