இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மதுரையின் சிறந்த பொழுதுப்போக்கு பூங்காவான அதிசயம் தீம் பார்க், மதுரை - திண்டுக்கல் சாலையில் சமய நல்லூருக்கு அருகில் அமைந்துள்ளது.
இது மதுரையிலிருந்து ஏறத்தாழ 12கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
சிறப்புகள் :
மிகப் பெரிய பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்காவில் பலவிதமான விளையாட்டுகளும், நீர்ச்சவாரி விளையாட்டுகளும் உள்ளன.
இந்த விளையாட்டுப்பூங்கா 'குவீன் ஆஃப் இந்தியன் தீம் பார்க்ஸ்" என்று அழைக்கப்படும் புகழைப்பெற்றுள்ளது.
குடும்பம் முழுவதிற்குமான ஒட்டுமொத்த பொழுதுப்போக்கு அம்சங்களை ஒரே இடத்தில் இப்பூங்கா கொண்டுள்ளது.
என்ட்ரன்ஸ் ஷவர், சிந்துபாத், பிக் ஸ்பிளாஷ், வேவ் பூல் மற்றும் லேசி ரிவர் போன்ற விளையாட்டு அம்சங்கள் இங்கு குறிப்பிடத்தக்க நீர் விளையாட்டுகளாகும்.
உல்லாசம், சாகசப்பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கையை நாடுபவர்களுக்கு இந்த அதிசயம் தீம் பார்க் மிகவும் ஏற்றதாக இருக்கும்.
குற்றாலம் அருவியைப்போன்று இங்குள்ள நீர்விளையாட்டு அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
குழந்தைகளும், பெரியவர்களும் தண்ணீரில் விளையாடுவதற்கு ஏராளமான தண்ணீர் விளையாட்டுகள் உள்ளன. மேலும், இங்கு பல்வேறு ராட்டினங்களும் உள்ளன.
எப்படி செல்வது?
மதுரையிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது.
விமானம் வழியாக :
மதுரை விமான நிலையம்.
ரயில் வழியாக :
மதுரை ரயில் நிலையம்.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
மதுரையில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
பார்க்க வேண்டிய இடங்கள் :
அருவி.
தண்ணீர் விளையாட்டுகள்.
இதர சுற்றுலாத்தலங்கள் :
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.
காந்தி மியூசியம்.
அழகர் கோவில்.
வைகை அணை.
திருமலை நாயக்கர் அரண்மனை.
திருப்பரங்குன்றம்.
காஜிமார் பெரிய மசூதி.
கோரிப்பாளையம் தர்க்கா.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக