இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நம்மைச்
சுற்றி அன்றாடம் ஏதேனும் ஓர் அதிசய நிகழ்வுகள் நடத்துக் கொண்டுதான் இருக்கிறது.
நாம் அது குறித்து அறிந்துகொண்டுதான் வருகிறோம். அதிலும் குறிப்பாக கோவில்கள். கண்
திறக்கும் பெருமாள், பால் குடித்த அம்மன், வியர்க்கும் முருகன் என பல நிகழ்வுகளை
நினைவு கூறலாம்.
அந்த
வகையில், இங்கே ஓர் கோவிலில் வருடத்தின் ஒரே நாளில் மட்டும் சூரியனின் ஒளி மூலவராக
வீற்றிருக்கும் சிவபெருமானை மீது விழும் அரிய நிகழ்வு நிகழ்கிறது. வாங்க அப்படி
அந்த கோவில் எங்கே உள்ளது? என்னவெல்லாம் சிறப்பு என்று பார்க்கலாம்.
இந்த
அரிய நிகழ்வு நடைபெறும் கோவில் விருதுநகர் மாவட்டம் முடுக்கங்குளம் என்ற ஊரிலுள்ள
அருள்மிகு அம்பலவாணர் திருக்கோவிலாகும். இப்பகுதி விருதுநகர் மாவட்டத்தில் இருந்து
சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில்
சிதம்பரம் நடராஜரின் திருநாமமான அம்பலவாணர் என்ற பெயர் சுவாமிக்கு
சூட்டப்பட்டுள்ளது. அதுபோல அம்பாளுக்கும், சிவகாம சுந்தரி என்ற பெயர் உள்ளது.
மாசி
சிவராத்திரி தினத்தில் வேறெங்கும் நிகழாத அதிசயமாக இங்கு சூரியனின் ஒளி சிவனின்
மீது படர்கிறது. இதற்காக பலகணி என்னும் கல்சாளரம் ஒன்று மூலவரின் சன்னிதி எதிரே
உள்ளது.
பல
நூற்றாண்டுகளுக்கு முன்பு பாண்டியரின் ஆட்சிக் காலத்தில் இக்கோவில்
கட்டப்பட்டதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. அவற்றின் அடையாளமாக கோவிலின் ஒரு
பகுதியில் பாண்டியரின் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக