இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஒரு
ஊரில் குணா, மோகன் என்பவர்கள் தன் குடும்பத்துடன் அடுத்தடுத்த வீட்டில் வசித்து
வந்தார்கள். இருவரும் நல்ல நண்பர்கள்.
இருவருக்கும்
ஓய்வு கிடைக்கும் சமயத்தில் ஒன்றாக மீன் பிடிக்கச் செல்வது வழக்கம். ஆனால்,
இருவரும் ஒன்றாகச் சென்று மீன் பிடிக்கும் சந்தர்ப்பம் அவர்களுக்கு பல நாட்களாக
அமையாமல் இருந்தது. அதன்பின் ஒருநாள் இருவருக்கும் விடுமுறை கிடைத்ததால் இருவரும்
மீன் பிடிக்கச் செல்ல முடிவெடுத்தனர்.
இருவரும்
அவரவர் தூண்டிலில் விழும் மீன்களைப் பத்திரப்படுத்துவதற்காக ஐஸ் பெட்டிகள் மற்றும்
அதற்கு பயன்படும் துணைக்கருவிகள், அவர்களுக்கான சிறு நொறுக்குத்தீனிகள்
எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு தயாரானார்கள்.
அவர்கள்
இருவரும் தங்களது வேலை, குடும்பம், மற்றும் பொது விஷயங்கள் எல்லாவற்றையும்
பேசியபடி ஏரிக்கரைக்கு வந்தனர். சிறிது இடைவெளிவிட்டு, தனித்தனியே அமர்ந்து
தூண்டில் போட்டு மீன் பிடிக்க ஆரம்பித்தார்கள்.
குணா
தூண்டிலை ஏரியில் போட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பெரிய மீன் மாட்டியது. குணா
சத்தமாக, மோகன்! எனக்கு ஒரு பெரிய மீன் சிக்கிக் கொண்டது. நான் பெரிய
அதிர்ஷ்டக்காரன்! என்று சத்தமாக கூறினார்.
பிறகு
அந்த மீனைப் பிடித்து அவர் கொண்டு வந்த ஐஸ் பெட்டியில் போட்டு
பத்திரப்படுத்தினார். சற்று நேரத்தில் மேலும் சில சின்ன மீன்கள் குணாவின் தூண்டிலில்
மாட்டியது. அத்தனை மீன்களையும் ஐஸ் பெட்டிக்குள் வைத்தார். நிறைய மீன்களை
பிடித்துவிட்டதால் தன் நண்பர் மோகனிடம் சென்று அமர்ந்து வேடிக்கைப் பார்த்தார்.
ஒரு
மணி நேரமாகியும் மோகனின் தூண்டிலில் ஒரு மீன் கூட சிக்கவில்லையே என
வருத்தப்பட்டார், குணா. பின் மோகனிடம் தூண்டிலில் இரை இருக்கிறதா? என்று பார்க்கச்
சொன்னார். தூண்டிலை தூக்கிப் பார்த்ததும் அதில் இரை இருந்ததால் மீண்டும் அதை
நீருக்குள் விட்டார்.
மேலும்,
ஐந்து நிமிடங்கள் கழிந்தன. மோகன், நான் உனக்கு உதவி செய்யட்டுமா? என் தூண்டிலை
நீருக்குள் போடுகிறேன். மீன் கிடைத்தால் அதை நீயே எடுத்துக்கொள் என்றார், குணா.
அதற்கு
மோகன், வேண்டாம் என மறுத்துவிட்டார். இன்னும் சிறிது நேரத்தில் எப்படியும் மீன்
சிக்கிக்கொள்ளும், அதனால் நீ எனக்காக காத்திருக்காமல் வீட்டிற்குச் செல். நானும்
சிறிது நேரத்திலேயே வீடு திரும்புகிறேன் என்றார், மோகன். அதற்கு பதில் எதுவும்
கூறாமல் அமைதியாக அமர்ந்திருந்தார், குணா.
பத்து
நிமிடத்திற்குப் பிறகு மோகனின் தூண்டிலில் ஒரு பெரிய மீன் மாட்டியது. அதைப்
பிடித்த மோகன், மறுபடியும் அந்தப் பெரிய மீனைத் தண்ணீருக்குள்ளேயே விட்டுவிட்டார்.
இதைப் பார்த்து குழம்பிப் போனார், குணா.
சற்று
நேரத்தில் மீண்டும் ஒரு பெரிய மீன் கிடைத்தது. அதையும் திரும்ப தண்ணீருக்குள்ளேயே
விட்டுவிட்டார். அதற்குப் பிறகும் பெரிய மீன்கள் வரிசையாக தூண்டிலில்
மாட்டிக்கொண்டே இருந்தது. எல்லாவற்றையும் தண்ணீருக்குள்ளேயே விட்டுக்கொண்டிருந்தார்,
மோகன்.
ஒரு
கட்டத்திற்கு மேல் குணா, மோகனை பார்த்து எதற்காக தூண்டிலில் சிக்கிய பெரிய மீன்களை
மீண்டும் தண்ணீருக்குள்ளேயே விடுகிறாய் எனக் கேட்டார். அதற்கு மோகன், என் வீட்டில்
சமைக்கும் பாத்திரம் சிறியதாக இருப்பதால் இவ்வளவு பெரிய மீன்களை அதில் போட்டு சமைக்க
முடியாது. அதனால் தான் பெரிய மீன்களை மீண்டும் தண்ணீருக்குள்ளேயே விடுகிறேன்
என்றார். இதைக் கேட்டு ஒரு கணம் திகைத்துப் போனார், குணா.
பிறகு
மோகனிடம் சிறிய பாத்திரமாக இருந்தால் என்ன? பெரிய பாத்திரமாக இருந்தால் என்ன?
பெரிய மீனை சிறிய துண்டுகளாக வெட்டியும் சமைக்க முடியும் என்றார்.
நீதி:
'இதுபோல
தான் வாய்ப்புகளும்!! வரும் வாய்ப்பு சிறியதோ! பெரியதோ! வரும்போதே பயன்படுத்திக்
கொள்ள வேண்டும்."
வாய்ப்பு
என்பது அனைவருக்கும் கிடைக்காது. அப்படி கிடைத்தால் கிடைத்த வாய்ப்பை யாரும்
பொருட்படுத்துவது இல்லை. வாய்ப்பு கிடைக்கும் பொழுது அதனை பயன்படுத்திக் கொள்வதே
சிறப்பு.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக