இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மூலவர் : பாலமுருகன்.
உற்சவர் : முருகன்.
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்பு.
ஊர் :
தாண்டிக்குடி.
மாவட்டம் :
திண்டுக்கல்.
தல வரலாறு
:
ஆறாவது படைவீடான பழமுதிர்ச் சோலையில் மலைவளம் கண்டபிறகு,
தாண்டிக்குடி வந்தார் முருகப்பெருமான். பின் அகஸ்தியரின் சீடரனான இடும்பன் கயிலாயத்திலிருந்து
சிவகிரி, சக்திகிரி ஆகிய இரண்டு மலைகளை சுமந்து கொண்டு பழநி வந்து சேருகிறார். இதை
அறிந்த முருகன் இந்த இரண்டு மலைகளில் ஒன்று தனக்கு இருப்பிடமாகிக் கொள்ள உரியது என
கருதி தாண்டிக்குதிக்கிறார்.
இதன் காரணமாகவே இந்த இடம் தாண்டிக்குதி என்ற அழைக்கப்பட்டு,
காலப்போக்கில் மருவி தாண்டிக்குடி ஆனது. பன்றிமலை சுவாமிகளின் வேண்டுகோளின்படி முருகனே
கோவில் கட்ட தேவையான பொருள்களுக்கு அது சம்பந்தப்பட்ட நபர்களின் கனவில் தோன்றி, அந்தப்
பொருள்களை கொடுக்க கூறினார் என்றும், தற்போது கோவிலில் உள்ள மூலவர் சிலை கூட ஸ்தபதி
ஒருவரின் கனவில் முருகனே சென்று கூறி அதன் மூலம் நிறுவப்பெற்று, திருப்பணிவேலைகள் முருகப்பெருமானின்
மேற்பார்வையிலேயே முடிந்தது.
கணபதி, முருகன், மயில், இடும்பன், பைரவர், அகஸ்தியர்
மற்றும் நவக்கிரகங்களுடன் 1949ல் மிகச் சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. பழனி முருகன்
கோவிலில் உள்ள மூலவரின் அமைப்பே இக்கோவிலிலும் உள்ளது. இந்தக் கோயிலுக்கு மருதநாயகமும்,
கணபதியும் தலைமைப்பூசாரியாக இருந்திருக்கிறார்கள்.
தல பெருமை
:
இக்கோவிலில், ஒரு பாறையிலேயே சிறு பள்ளத்தில் என்றுமே
வற்றாத தீர்த்தம் வருகிறது. இக்கோவிலில் இருந்து 75 அடி தூரத்தில் ஒரு மண்மேடு உள்ளது.
இந்த மண்ணே இக்கோவிலின் திருமண்ணாக வாய்த்திருக்கிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு இத்திருமண்ணே
விபூதி பிரசாதமாக அளிக்கப்படுகிறது.
பிரார்த்தனை
மற்றும் நேர்த்திக்கடன் :
தாண்டிக்குடி வந்து முருகனை தரிசித்து, பிரார்த்தனை
செய்வதன் முலம் முருகப்பெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும். நேர்த்திக்கடனாக பங்குனி
உத்திர தினத்தன்று காவடி தூக்கிச் சென்று வழிபடுகின்றனர்.
திருவிழா
:
பங்குனி உத்திரத்திருவிழா, மாத கார்த்திகை, திருக்கார்த்திகை
மற்றும் வைகாசி விசாகம் போன்ற விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
திறக்கும்
நேரம்:
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடை திறந்திருக்கும்.
முகவரி
:
அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்,
தாண்டிக்குடி - 624 216,
திண்டுக்கல் மாவட்டம்,
போன் : 91 - 4542 - 266
378, 91 - 99626 71467.
செல்லும்
வழி :
திண்டுக்கல் மாவட்டம் பெரியகுளம் செல்லும் வத்தலக்குண்டிலிருந்து
45 கி.மீ., தொலைவில் தாண்டிக்குடி பாலமுருகன் திருக்கோவில் அமைந்துள்ளது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக