>>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 8 ஜூலை, 2019

    சுருளி அருவி

     Image result for சுருளி அருவி 

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

     

    Follow Us:

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



    தேனி மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது சுருளி அருவி.

    தேனியிலிருந்து 48கி.மீ தொலைவிலும், உத்தமப்பாளையத்திலிருந்து 19கி.மீ தொலைவிலும், கம்பம் நகரிலிருந்து 10கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள ஒரு அழகான சுற்றுலாத்தலம்.

    சிறப்புகள் :

    இயற்கையின் கட்டுக்கடங்காத சக்தியின் எடுத்துக்காட்டான சுருளி அருவி இரண்டு கட்டமாக பிரதிபலிக்கின்றது. இங்கு கீழ்ச் சுருளி, மேல் சுருளி என இரு இடங்கள் உள்ளன.

    இளங்கோ அடிகளார் தமது காப்பியமான சிலப்பதிகாரத்தில் இவ்வருவியின் சிறப்பை குறிப்பிட்டுள்ளார்.

    இந்த சுருளி அருவி இயற்கை எழில் மிகுந்தது. சுருளி வேலப்பர் வீற்றிருக்கும் அருவியில் இருந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும் சமயத்தில் மதுரை, திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து இந்த அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.

    இங்கு இஸ்லாமியர்கள் வணங்கும் தர்காவும், சுருளி வேலப்பர் கோவிலும் அருகாமையில் அமைந்துள்ளது. பக்தர்கள் இங்கு சித்திரை மாதத்தில் பால்குடங்கள் எடுத்துச் சென்று பிரார்த்தனை செய்கின்றனர்.

    கானகத்தின் நடுவில் இருக்கும் அருவியில், பலவகையான விலங்கினங்களை காண முடியும்.

    எப்படி செல்வது?

    தேனியிலிருந்தும், கம்பத்திலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.

    விமானம் வழியாக :

    மதுரை விமான நிலையம்.

    ரயில் வழியாக :

    மதுரை ரயில் நிலையம்.

    எப்போது செல்வது?

    அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

    எங்கு தங்குவது?

    தேனியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

    பார்க்க வேண்டிய இடங்கள் :

    சுருளி வேலப்பர் கோவில்.
    புண்ணிய தலம்.
    கோடிலிங்கம்.
    திராட்சைத் தோட்டங்கள்.

    இதர சுற்றுலாத்தலங்கள் :

    அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில்.
    கும்பக்கரை அருவி.
    குரங்கனி.
    குச்சனூர்.
    ஸ்ரீ பென்னிகுவிக் மணிமண்டபம்.
    வைகைஅணை.
    மங்களதேவி ஸ்ரீ கண்ணகி திருக்கோவில்.

    என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
    உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
    உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...



    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக