இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
உலக அதிசயங்களில் ஒன்றான மச்சு பிச்சு, உருபாம்பா பள்ளத்தாக்கின் அருகே அடர் காட்டில், அருவிகளின் ஆரவாரத்தில் கற்பனை செய்ய முடியாத அழகின் உச்சத்தில் அமைந்துள்ளது.
இந்நகரத்தை இன்காவின் தொலைந்த நகரம் என்றும் கூறுவார்கள்.
இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படும் மச்சு பிச்சு, பெரு நாட்டின் கஸ்கோ நகரிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மிகவும் துல்லியமாக கணித்து கட்டப்பட்டுள்ள மச்சு பிச்சு இன்கா காலத்தின் கட்டிடக் கலைக்கு சான்றாக அமைந்துள்ளது.
1450ஆம் ஆண்டு கட்டப்பட்ட மச்சு பிச்சு, கடல் மட்டத்திலிருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய நகரமாகும்.
இந்த நகரத்தை 1911-ல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் கண்டுபிடித்தார். அதன் பின்னர் இன்று வரை இந்நகரம் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.
150க்கும் மேற்பட்ட கட்டிடங்களால் உருவான மச்சு பிச்சுவை 1983ஆம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது.
50டன் எடை கொண்ட பல கற்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மலைமீது இந்த கற்கள் எப்படி கொண்டுவரப்பட்டது என்பது மிகப்பெரிய ஆச்சரியமே.
மலையடிவாரத்தில் இருந்து பார்த்தால், மலை உச்சியில் இருக்கும் கட்டிடம் பார்வைக்குத் தெரியாதவாறு கட்டப்பட்டுள்ளது.
செங்குத்தான மலைத்தொடரின் உச்சியில் 1000 பேர் வாழும்படியாக ஒரு நகரத்தை எந்தவித தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல் எப்படி உருவாக்கினார்கள்? என்பது வியப்பின் உச்சம்.
மச்சு பிச்சுவின் கட்டுமானத்திற்கு இரும்பு ஆயுதங்களோ, பொதி சுமக்கும் விலங்குகளோ பயன்படுத்தப்படவில்லை என்பது தொல்லியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.
100க்கும் அதிகமான படிக்கட்டு வரிசைகள் இதன் வளாகத்தில் அமைந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான படிகள் ஒற்றைக் கல்லைக் குடைந்து செய்யப்பட்டவையாகும்.
அஷ்லார் (யளாடயயச) என்ற தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி, இரு கற்களுக்கிடையே ஒரு கத்தி நுனி கூட நுழைய முடியாத அளவு கனக்கச்சிதமாகப் பொருத்தியுள்ளது உலக அதிசயமாகும்.
இங்குள்ள இன்டிகுவாட்டானா என்ற சூரியனுக்குக் கட்டப்பட்ட ஒரு கோவில் இதன் முக்கிய பகுதியாகும்.
இந்த புனிதக் கல், வானியல் மணிக்கூடாக அதாவது, சூரிய கடிகாரமாக கருதப்படுகிறது.
தொல்லியல் நிபுணர்கள் இந்நகரம் ராஜ எஸ்டேட்டாகவும், ரகசிய சடங்கு நிறைவேற்றும் இடமாகவும் விளங்கியதாக கூறுகின்றனர்.
மனிதர்கள் செல்வதே சவாலாக இருக்கும் இந்த இடங்களில் உள்ள இந்த கட்டிடங்கள் இன்றளவிலும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறது.
மச்சு பிச்சுவின் கட்டிடக் கலையையும், இயற்கை அழகையும் காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் சுற்றுலாவாசிகள் வந்து செல்கின்றனர்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக