இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஒரு கையில் நொறுக்குத் தீணியும், மறுகையில் போனும் வைத்து விளையாடுவதினால் உடல் சோர்வு, உடல் எடை அதிகரித்து ஆரோக்கியம்தான் குறையும்.
குழந்தைப் பருவம் என்பது ஓடி ஆடி விளையாட வேண்டிய பருவம். படிப்பு, நல்ல வேலை, வசதியான வாழ்க்கை என்பவை அவசியம்தான். ஆனால், விளையாட்டைத் தொலைத்துத்தான் வாழ்க்கையில் வெல்ல முடியும் என்றில்லை.
விளையாட்டு என்றவுடன் நமக்கு மைதானம்தான் நினைவிற்கு வரும். ஆனால், வீட்டுக்குள்ளேயும், வீட்டுத் திண்ணையிலும், குடும்பத்தில் உள்ளவர்களுடனும் அல்லது நம் நண்பர்களுடனும் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகளும் உள்ளது.
அதில் வீட்டுத் திண்ணையில் நம் உறவுகளுடன் சேர்ந்து விளையாடிய விளையாட்டுகளில் ஒன்றுதான் ராஜா ராணி.
எத்தனை பேர் விளையாடலாம்?
ஐந்து பேர்.
தேவையான உபகரணங்கள் :
வெள்ளைக் காகிதம் (பேப்பர்)
பேனா
எப்படி விளையாடுவது?
ராஜா, ராணி, மந்திரி, திருடன், போலீஸ் என வெள்ளைத்தாள்களில் எழுதிக் கொள்ளவும். பின்னர் ஒவ்வொருவருக்கும் மதிப்பெண்கள் தனித்தனியாக கொடுக்கப்படும்.
உதாரணமாக,
ராஜாவுக்கு அதிக மதிப்பெண்களும் (10000)
ராணிக்கு ராஜாவை விட குறைந்த மதிப்பெண்களும் (5000)
மந்திரிக்கு ராணியை விட குறைந்த மதிப்பெண்களும் (1000)
போலீஸூக்கு மந்திரியை விட குறைந்த மதிப்பெண்களும் (100)
திருடனுக்கு மதிப்பெண்கள் ஏதும் இல்லை (0)😊
பின் அவர்களில் ஒருவர் சீட்டுகளை மடித்து, குலுக்கிப் போடுவார். அதற்கு பின்னர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துண்டுச் சீட்டை எடுக்க வேண்டும்.
அனைவரும் அவர்களுக்கு வந்த சீட்டை ரகசியமாக பார்த்து தெரிந்துக்கொள்ள வேண்டும். ராஜா, ராணி மற்றும் மந்திரி சீட்டு வந்தவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர்.
அதில் போலீஸ் என்று எழுதிய சீட்டு வந்தவர், தனது துப்பறியும் திறனை கொண்டு அங்கு இருப்பவர்களில் திருடன் யாரென்று கண்டறிய வேண்டும். ஆனால் திருடன் சீட்டு வந்தவர், தான் திருடன் இல்லை என்பது போல் முகபாவனை செய்வர்... ஆனால், அதுவே அவரை திருடன் என்பதை காட்டி கொடுத்துவிடும்.
போலீஸ் திருடனை சரியாக கண்டுபிடித்துவிட்டால் அவருக்கு அதே மதிப்பெண்களும் (100), தவறாக இருந்தால் போலீஸஷுக்கு திருடனின் மதிப்பெண்களும் (0) வழங்கப்படும். திருடனாக இருப்பவருக்கு போலீஸின் மதிப்பெண்கள் (100) வழங்கப்படும். இவ்வாறாக ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுவர்.
பின் ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் அவர்களுக்கான மதிப்பெண்களை ஒரு தாளில் எழுதி வைத்துக் கொள்வர். இதில் நாம் எத்தனை ஆட்டங்கள் வேண்டுமானாலும் விளையாடலாம். இறுதியாக அனைவரின் மதிப்பெண்களும் கூட்டப்படும்.
தொடர் ஆட்டங்களில் குறைந்த புள்ளிகளைப் பெற்றவர் தோற்றவராகக் கருதப்படுவார். அதிகப் புள்ளிகள் பெற்றவர் வென்றவர் ஆவார்.
பலன்கள் :
கணிதத்திறன் மேம்படும்.
கண்டறியும் புலமை மேம்படும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக