Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 29 ஜூலை, 2019

இலான் மஸ்க்

Related image

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



திறமையும், முயற்சியும் இருந்தாலே போதும்... வாழ்க்கையில் எந்த உயரத்திற்கும் சென்று விடலாம். இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இலான் மஸ்க்

தன்னுடைய கடினமான முயற்சியாலும், திறமையாலும் கோடீஸ்வரராகவும், கண்டுபிடிப்பாளராகவும், ஸ்பேஸ்-எக்ஸ் கம்பெனியின் தலைவராகவும் உயர்ந்துள்ளார்.

பல கண்டுபிடிப்புகள் லாபத்தின் நோக்கத்திற்காக மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டாலும், சிலரே தங்களின் கண்டுபிடிப்புகள் லாபத்தை காட்டிலும் மக்கள் மனதையும் கவர வேண்டும் என விரும்புவர். அதில் ஒருவர் தான் இலான் மஸ்க்.

இவர் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியும் என்னும் திட்டத்தை செயல்படுத்தி கொண்டு வருகிறார். மேலும், தான் செவ்வாய் கிரகத்தில் தான் சாக வேண்டும் என்று கூறியவர்.

பிற கூட்டாளிகளுடன் இணைந்து இலான் மஸ்க் நிறுவிய டெஸ்லா மோட்டார்ஸ் தயாரித்த மின்சார மகிழுந்துகள் பிரபலமாய் விற்பனை ஆயின.

விண்வெளியில் சுற்றுலாப் பயணம் செய்ய விண்கலத்தை உருவாக்கி மனிதர்களை அனுப்புவதே ஸ்பேஸ் எக்ஸின் முதன்மை நோக்கமாகும். மேலும், செவ்வாய்க்கோளுக்கு மனிதர்களைக் குடியேற்ற வேண்டும். அது 2024ஆம் ஆண்டில் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார், இலான் மஸ்க்.

உலகில் சக்திவாய்ந்த மனிதர்களுள் முக்கியமாக இருப்பவரும், டாப் 100 கோடீஸ்வரர்களுள் ஒருவராகவும் இருக்கும் இலான் மஸ்க், தன் வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகளையும், அவர் சாதித்த சாதனைகளை பற்றியும் இனி தெரிந்து கொள்வோம்.


யார் இந்த இலான் மஸ்க்?
இலான் ரீவ் மஸ்க், 1971ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் பிறந்தார். தானாக கற்கும் திறன் கொண்ட இலான் மஸ்க், கம்ப்யூட்டர் புரோகிராமிங் முறைகளை தானாக கற்க தொடங்கினார். மேலும், தன்னுடைய கவனத்தை கம்ப்யூட்டர் புரோகிராமிங் துறையில் செலுத்தினார்.

இலான், தன்னுடைய 12வது வயதிலேயே ஒரு சிறு விளையாட்டை வடிவமைத்து, அதை ஒரு தொழில்நுட்ப பத்திரிக்கைக்கு 500 அமெரிக்க டாலர் மதிப்புக்கு விற்றார். தற்போது, பிளாஸ்ட்டர் என்ற அந்த விளையாட்டு ஆன்லைனில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

இலான் மஸ்க், புத்தகத்தை படிப்பதில் அதிக கவனம் செலுத்தினார். இவர் அதிகமாக யாரிடமும் பேச மாட்டார். இலானின் பெற்றோர்கள் பிரிந்ததினால், இலான் தென்னாப்பிரிக்காவிலிருந்து, தன் தாயுடன் கனடாவில் குடியேறினார். கனடாவில் குடியுரிமை பெற்று, தன்னுடைய மேல்நிலை பள்ளிப்படிப்பையும் முடித்தார்.

1992ஆம் ஆண்டில் ஒண்டாரியோவின் குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டுகள் படித்த பின், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இரண்டு இளநிலை பட்டப்படிப்பை முடித்தார்.

இயற்பியல் மற்றும் வர்த்தக துறையில் இரண்டு தனித்தனி படிப்பை முடித்த இவர், இன்றுவரை இந்த இரண்டு துறைகளையும் வைத்து பல புதிய கண்டுபிடிப்புகளை தந்துக்கொண்டே இருக்கிறார். இச்சமயத்தில் இவருக்கு புதிய தொழில் தொடங்க யோசனைகள் தோன்றியது.

இலான் மஸ்க், 1995ஆம் ஆண்டில் சிலிகான் வேலியின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழத்தில் டாக்டரேட் பட்டப்படிப்பிற்கு சேர்ந்தார். ஆனால், இரண்டே நாட்களில், தனது படிப்பை விட்டு நின்று தன்னுடைய பிஸினஸ் கனவுகளை நனவாக்க தொடங்கினார்.

ZIP2

இலான் மஸ்க், 1995ஆம் ஆண்டு ZIP2 Software Company ஆரம்பிக்க, அவரது சகோதரரும், அப்பாவும் சேர்ந்து 28000 டாலர்கள் கொடுத்தனர். இந்நிறுவனம் பல செய்தித்தளங்களுக்கும், இணையதளங்களுக்கும் தொடர்பு ஏற்படுத்தி தரும் நிறுவனமாக விளங்கியது. பிரபல ஊடகங்களான நியூயார்க் டைம்ஸ் மற்றும் சிகாகோ ட்ரிபியூன் போன்றவற்றுடன் இணைந்து ZIP2 Software Company -யை விரிவுப்படுத்தி கொண்டார். இதன்மூலம் ZIP2 Software Company மேலும் வளர இலான் மஸ்க் முக்கிய காரணமாக மாறினார். ZIP2 Software Company மேலும் வளர பல தடைகள் வந்து கொண்டே இருந்தன ZIP2 Software Company -யின் நிறுவனர் மட்டுமல்லாமல் CEO பொறுப்பையும் வகிக்க இலான் மஸ்க் ஆசைப்பட்டார். ஆனால், மற்ற உறுப்பினர்களின் தடைகளால் CEO பொறுப்பை ஏற்க இவருக்கு தடை ஏற்பட்டது.

அதன்பின் இலான் மஸ்க், 1999ஆம் ஆண்டு தனது ZIP2 Software Company -யை விற்க முடிவு செய்தார். பின் ZIP2 நிறுவனத்தை விற்று தனக்கான பங்கை மட்டும் எடுத்துக் கொண்டார். இந்த பங்கானது கிட்டத்தட்ட 22 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்டது. தான் ஆரம்பித்த முதல் கம்பெனி அவருக்கு தோல்வியை தந்தாலும், மனம் தளராமல் தனது பங்கை வைத்து அடுத்த நிறுவனத்தை தொடங்கினார்.

X.Com


Zip 2 கம்பெனியை விற்ற பங்கினை கொண்டு அதே ஆண்டில் (1999) X.com என்ற Online Banking (இணையம் மூலம் பணம் செலுத்தும் வசதி) கம்பெனியை தொடங்கினார். தொடங்கிய அடுத்த ஆண்டே, X.com கம்பெனியுடன், கான்பினிட்டி என்ற நிறுவனம் இணைந்தது. இந்த இணைப்புடன், பேபால் நிறுவனமும் இணைந்தது. அதன்பின் இலான் மஸ்க், பேபால் நிறுவனத்தின் துணை நிறுவனரானார். நிறுவனத்தின் முக்கிய அங்கம் பேபால் என்பதை உணர்ந்த இலான் மஸ்க், X.com என்ற தனது நிறுவனத்தை 2001ல் பேபால் என மாற்றினார். ஆரம்பத்தில் பேபால் சேவை மக்களிடம் அதிகம் வரவேற்கப்படாமல் இருந்தாலும், இலானின் வழிகாட்டுதலின் மூலம் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. ஆயிரத்தில் இருந்த பேபால் பயனாளர்களை மில்லியன் பயனாளர்கள் வரை கொண்டு சென்றது இலானின் வழிகாட்டுதலே ஆகும். ஒருவரின் வளர்ச்சி மற்றவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தும் என்பதற்கேற்ப.... மற்ற கூட்டாளிகளுக்கும், இலானுக்கும் சண்டை இருந்துக்கொண்டே வந்தது. இந்த சண்டையின் காரணமாக பேபால் நிறுவனமும் விற்கும் நிலைக்கு வந்தது.

பேபால் நிறுவனம், Ebay நிறுவனத்திற்கு விற்கபட்டது. இந்த காலக்கட்டத்தில் , Ebay யின் ஆன்லைன் பரிவர்த்தனைகள் பேபால் மூலமாக நடந்து வந்தது. 2002ஆம் ஆண்டு Internet Company Standards-யை ஒப்பிடும்போது இது மாபெரும் சேலாக இருக்க வேண்டும் என்று 1.5 பில்லியன் டாலருக்கு Stock  கைமாறியது. இதில் இலானுக்கு பேபால் மூலம் 165 மில்லியன் டாலருக்கு கிடைத்தது.

Space X

இந்த காலக்கட்டத்தில் தான் இலான் மஸ்க் விண்வெளி பயணத்தை பற்றிய கனவை காண ஆரம்பித்தார். இதன் விளைவாக, செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் வகையில் Miniature Experimental greenhouse பற்றி யோசிக்க ஆரம்பித்தார். மேலும்Vertical Intergration and Modular approach of sotware Intergration என்னும் கோட்பாட்டை வைத்து மலிவான ராக்கெட்டை உருவாக்க வேண்டும். மேலும், அந்த ராக்கெட் திரும்ப பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என நினைத்தார். இவையெல்லாம்தான் Space X  நிறுவனம் உருவாக காரணமாக அமைந்தது. மலிவாக ராக்கெட்டை தயாரிப்பதுதான் இலான் மஸ்க்கிற்கு தொலைநோக்கு பார்வையாக இருந்தது.

இலான் மஸ்க் தன்னுடைய திட்டத்தை செயல்படுத்த முதலில் பல ரஷ்ய மற்றும் அமெரிக்க நிறுவனங்களை தொடர்பு கொண்டார். இலான் மஸ்கின் திட்டம் நிறுவனங்களுக்கு பிடித்திருந்தாலும், குறைந்த செலவில் ராக்கெட்டை உருவாக்கி அதை மீண்டும் பயன்படுத்தக்கூடியதாக இருப்பது என்பது இயலாத காரியம் என்றும் அப்படியே குறைந்த செலவில் ராக்கெட் செய்தாலும் அது பாதுகாப்பாக இருக்காது என்பதை கருத்தில் கொண்டு பல நிறுவனங்கள் இலான் மஸ்கின் இந்த யோசனையை நிராகரித்தன. தன்னுடைய திட்டத்தை செயல்படுத்த பல நிறுவனங்கள் நிராகரித்ததால், இலான் மஸ்க் இந்த திட்டத்தை தானே செயல்படுத்த திட்டமிட்டார். 2002ஆம் ஆண்டு Space X  நிறுவனத்தை தொடங்கினார்.

அதன்படி பேபால் மூலம் கிடைத்த பங்கு மற்றும் சில பங்குதாரர்களின் உதவியுடன் தனது சொந்த செலவில் ராக்கெட்டை உருவாக்கி, அதை தன் Space X  நிறுவனம் மூலம் விண்வெளிக்கு அனுப்பினார். அதன்பின் Space X  நிறுவனம் வெகு விரைவில் லாபத்தை பார்க்க ஆரம்பித்தது. இதன்மூலம் மற்ற விண்வெளி நிலையங்களை காட்டிலும், குறைவான விலையில் ராக்கெட்டை உருவாக்கி விண்ணுக்கு செலுத்த முடியும் என்பதை நிரூபித்து காட்டினார்.

Space X நிறுவனம் முதலில் Falcon1 மற்றும் Falcon 9 என்ற இரண்டு ராக்கெட்டுகளை அறிமுகப்படுத்தியது. மேலும், Space X நிறுவனத்தின் முதல் விண்கலம் Dragon ஆகும். அதன்பின் ஏழு ஆண்டுகளில் Flacon Launch Vechicles and the Dragon Mulitpurpose Spacecraft வடிவமைத்தது. இலான் மஸ்க், சர்வதேச விண்வெளி மையத்துடன் சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

இதைத்தொடர்ந்து, Space X நிறுவனம் நாசாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பும் கோள்களை வடிவமைக்க தொடங்கியது. இதன்பின், , Space X நிறுவனம் உலகத்தின் தலைசிறந்த தனியார் செயற்கைக்கோள்கள் வடிவமைப்பு மையமாக மாறியது. விண்வெளிக்கான சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தை ஏற்படுத்துவதே இந்த நிறுவனத்தின் குறிக்கோள் ஆகும்.

மேலும், இந்நிறுவனம் மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இலான் மஸ்கின் Space X  நிறுவனம் தற்போது உலக வரலாற்றில் மிகப்பெரிய அடியை எடுத்து வைத்துள்ளது. நிலவிற்கு மனிதனை அழைத்து செல்லும் திட்டத்திற்கான முறையான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி ஜப்பான் நாட்டு தொழிலதிபரான யுசாகு மேசாவா என்பவரை நிலவுக்கு அனுப்பவுள்ளது. இவர் ஜப்பானில் உள்ள மிகப்பெரிய 17 கோடீஸ்வரர்களில் ஒருவர். இந்தியாவில் உள்ள பிளிப்கார்ட் போல சோசோடவுன் என்ற ஆன்லைன் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

விண்வெளி துறையில் மட்டும் தன் சாதனைகளை நிரூபித்து காட்டிய இலான் மஸ்க் அடுத்து வருங்காலத்தின் வளர்ச்சியை மனதில் கொண்டு மின் கார்களை தயாரித்தார்.

இலான் மஸ்கை உலக புகழ்பெற வைத்த ஒரு நிறுவனம் டெஸ்லா மோட்டார்ஸ்
டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தில் தனது பங்கு 7.5 மில்லியன் டாலர்களை முதலீடு செய்து டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் மேலும் உயர பாடுபட்டார். முதலீட்டாளராக மட்டுமில்லாமல் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தில் முன்னின்று டெஸ்லா ரோடுசேர்  டிசைனுக்கு பொறுப்பாளராக இருந்து கார்பன் பைபர் பாடி தான் பயன்படுத்த வேண்டும் என வற்புறுத்தினார். ஒரு கட்டத்தில் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் விற்கும் நிலைக்கு வந்தபோது அந்நிறுவனத்தை இலான் மஸ்க் வாங்கி கொண்டார். அதன்பின் 2008ஆம் ஆண்டு டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஊநுழு ஆனார். இவர் பொறுப்பேற்ற பிறகு வெளியான முதல் கார் 31 நாடுகளில் 2500 கார்களை விற்றது.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், வடிவமைக்கப்படும் கார்கள் இலானின் யோசனை மற்றும் திட்டத்தை கொண்டே உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு கார் வடிவமைப்பிலும் இலானின் கைவண்ணம் இருப்பது ஆச்சர்யம்.

சோலார் சிட்டி
அடுத்து சோலார் சிட்டி -யை இலான் நிறுவினார். சூரியசக்திகொண்டு வீட்டிற்கும், பல்வேறு நிறுவனங்களுக்கும் தேவையான மின் பொருளை உற்பத்தி செய்து கொள்ள தேவையான சோலார் பலகைகளை வடிவமைப்பதே சோலார் சிட்டியின் குறிக்கோள் ஆகும்.

தற்போது அமெரிக்காவில் சோலார் பலகைகளை வடிவமைப்பதில் இரண்டாவது இடத்தில் சோலார் சிட்டி இருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

ஹைப்பர்லூப் :

இலான் மஸ்க், 2013ல் ஹைப்பர்லூப் என்னும் கருத்தை முன் வைத்தார். ஹைப்பர்லூப்-ன் முக்கிய நோக்கம் இரண்டு வௌ;வேறு இடங்களுக்கு குறைந்த நேரத்தில் அதிவேகமாக பயணிக்கக்கூடிய வசதியே ஆகும்.

சென்னையிலிருந்து பெங்கள ருக்கு 20 நிமிடம், சென்னையிலிருந்து மும்பைக்கு 50 நிமிட பயணத்தை சாத்தியப்படுத்தி காண்பிக்க முடியும் என்பதே ஹைப்பர்லூப்பின் திட்டம்.

ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு 2021ல் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இத்தொழில்நுட்பம் இன்னும் சோதனை முயற்சி அளவிலேயே உள்ளது.

இலான் மஸ்க், தலைசிறந்த தொழிலதிபர் ஆவதற்கு அவர் கடந்து வந்த பாதையில் சந்தித்த தோல்விகள், அவமானங்கள் எண்ணற்றவை. தன்னுடைய யோசனைகள் சாத்தியப்படும் எனக்கூறி விடாமுயற்சியுடன் போராடி மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட், மின் கார், சோலார் சிட்டி போன்றவற்றை சாதித்துக்காட்டினார். மேலும், ஹைப்பர்லூப் திட்டத்தை செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

சாதனைகள் புரிவதற்கு வயதோ, பணமோ தடையில்லை என்பதை நிரூபித்து காட்டிய இலான் மஸ்கின் வாழ்க்கை வரலாறு நமக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக