இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சென்னை என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது கடற்கரைதான். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் பரந்து விரிந்திருக்கும் ஓர் அழகிய இடம்தான் மெரீனா கடற்கரை. சென்னையில் எத்தனை சுற்றுலா இடங்கள் இருந்தாலும் இக்கடற்கரைக்கு எதுவும் ஈடாகாது. சென்னையிலிருந்து ஏறத்தாழ 6கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
சிறப்புகள் :
தன்னைத் தேடி வந்தவர்களை எல்லாம் மடியில் வைத்துத் தாலாட்டும் வங்காள விரிகுடா கடல். நகர வாழ்வின் இறுக்கத்தைத் தளர்த்தி இளைப்பாற நினைப்பவர்களின் இலவசப் பூங்கா.
உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்று. இந்த கடற்கரை சுமார் 13கி.மீ நீளத்தில் அமைந்துள்ளது.
இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால் இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
இந்தியாவின் பெரிய ஓட்டமாகிய சென்னை மாரத்தானும் இங்கு நடைபெறும். ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்பர்.
பொங்கல் திருநாளில் மக்கள் தங்கள் உறவினர்களுடன் கூடி மகிழும் இடமும் இதுவே. சுதந்திர நாள் மற்றும் குடியரசு தின நாட்களில் அரசுத் துறைகளின் அணிவரிசை நடைபெறும்.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. கரையை ஒட்டி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மணல் பரவியிருக்கிறது. காலை மற்றும் மாலை வேளைகளில் கடற்கரையில் நடக்கலாம்.
கரையில் அமர்ந்து ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளை ரசிக்கலாம். மேலும் இக்கடற்கரையில் துப்பாக்கி சுடுதல், ராட்டினம், குதிரை சவாரி, பட்டம் விடுதல் போன்ற பல விஷயங்கள் குழந்தைகளைச் சந்தோஷப்படுத்துகின்றன.
குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சென்றுவர உகந்த இடமாக சென்னை மெரீனா கடற்கரை விளங்குகிறது.
எப்படி செல்வது?
சென்னைக்கு அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது.
விமானம் வழியாக :
சென்னை விமான நிலையம்.
ரயில் வழியாக :
சென்னை ரயில் நிலையம்.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
சென்னையில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
பார்க்க வேண்டிய இடங்கள் :
உழைப்பாளர் சிலை.
அண்ணா சமாதி.
அண்ணா நினைவகம்.
ஜெயலலிதா சமாதி.
கருணாநிதி சமாதி.
எம்ஜிஆர் சமாதி.
கற்பாறை.
சென்னை கலங்கரை விளக்கம்.
இதர சுற்றுலாத்தலங்கள் :
வண்டலூர் பூங்கா.
கிஷ்கிந்தா.
மகாபலிபுரம்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டை.
பிர்லா கோளரங்கம்.
வள்ளுவர் கோட்டம்.
பாம்புப் பண்ணை.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்.
மெரீனா கடற்கரை.
முட்டுக்காடு படகுத்துறை.
கோவளம்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக