இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மூலவர் : ரங்கநாத பெருமாள்.
தல விருட்சம் : புன்னாக மரம் உள்ளது.
பழமை : 1000 - 2000 வருடங்களுக்கு
முன்பு.
ஊர் : ஆதி திருவரங்கம்.
மாவட்டம் : விழுப்புரம்.
தல
வரலாறு :
முன்னொரு காலத்தில் சந்திரன் தனது
மனைவிகளின் சாபத்தினால் கலைகள் குறைந்து ஒளி மங்கி பொலிவு இழந்து வருந்தினான்.
பின்பு தேவர்களின் அறிவுரையின் படி இத்தலம் வந்து பெருமாளை வணங்கி தனது குறைகள்
நீங்கப்பெற்றான்.
தென்கிழக்கிலுள்ள தீர்த்தத்தில் நீராடி
தவம் செய்ததால் இந்த தீர்த்தத்திற்கு சந்திர புஷ்கரணி என்ற பெயர் உண்டாயிற்று. சிறிது
காலம் சென்ற பின் தேவர்கள் மீண்டும் பெருமாளை இதே இடத்தில் எப்பொழுதும்
எழுந்தருளியிருக்க வேண்டும் என்று வேண்ட, பெருமாளும் கருணைகூர்ந்து தேவ தச்சன்
விஸ்வகர்மாவை அழைத்து தன்னைப்போலவே ஒரு விக்ரகத்தை நியமிக்கும்படி கூறினார்.
தேவதச்சனும் மிகப்பெரிய பள்ளி கொண்ட
பெருமாளை வடிவமைத்து ஒரு ஆலயத்தை நிர்ணயித்து அதில் பிரதிஷ்டை செய்து விட்டார்.
பெருமாளும் தேவர்களுடைய வேண்டுகோளின் படி இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து
வருகிறார்.
தல
பெருமை :
தமிழ்நாட்டிலேயே மிக மிகப் பெரிய
பெருமாளில் இவரும் ஒருவர் ஆவார். இவர் ஸ்ரீ ரங்கத்தில் உள்ள ரங்கநாத பெருமானை விட
பெரியவர். இதனால் இந்த பெருமாள் பெரிய பெருமாள் என அழைக்கப்படுகிறார்.
பிரார்த்தனை
மற்றும் நேர்த்திக்கடன் :
கல்வியில் சிறந்து விளங்க இத்தல இறைவனை
வேண்டுகிறார்கள். நேர்த்திக் கடனாக பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம்
செய்து துளசி அர்ச்சனை செய்கிறார்கள்.
திருவிழா
:
புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மற்றும்
பவுர்ணமிகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மேலும் வைகுண்ட ஏகாதசி நாளிலும்
சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
திறக்கும்
நேரம்:
இத்தலம் காலை 6 மணி முதல் இரவு 7.30
மணி வரை திறந்திருக்கும்.
முகவரி
:
அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள்
கோவில்,
ஆதி திருவரங்கம் - 605 802,
விழுப்புரம் மாவட்டம்.
போன் - 91 - 4153 - 293
677
செல்லும்
வழி :
விழுப்புரம் மாவட்டத்தின் அருகேயுள்ள
திருக்கோவிலூரிலிருந்து 16 கி.மீ தொலைவில் ஆதி திருவரங்கம் கோவில் அமைந்துள்ளது.
திருக்கோவிலூரிலிருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக