இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கிராமப்புறங்களில் விளையாடும் விளையாட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். தற்போதைய காலக்கட்டத்தில் எல்லா வீடுகளிலும் அலைபேசிதான் குழந்தைகளின் விளையாட்டுத் திடலாக உள்ளது.
ஆனால் கிராமப்புறங்களில் விளையாடும் விளையாட்டுகள் குழந்தைகளுக்கு புத்துணர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் பெற்றுத்தருவதாக இருக்கின்றன. இன்று சிறுவர் சிறுமியர்கள் விளையாடும் குதூகலமான விளையாட்டுக்களில் ஒன்றை பற்றி பார்க்கலாம்.
எத்தனை பேர் விளையாடலாம்?
எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
குழந்தைகள் குழுவாக நின்று கொள்ள வேண்டும்.
விளையாடும் இடத்தில் இருந்து ஒரு இடத்தை இலக்காக தேர்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பின் முதல் போட்டியாளர் யார் என்பதை தேர்வு செய்து அவர் சிறிது தள்ளி முன் வந்து நிற்க வேண்டும்.
இப்போது பாடல் வடிவில் விளையாட்டு ஆரம்பிக்கப்படும்.
போட்டியாளர் : ரோஸ் ரோஸ்
குழந்தைகள் : என்ன ரோஸ்?
போட்டியாளர் : பட்டு ரோஸ்
குழந்தைகள் : என்ன பட்டு?
போட்டியாளர் : காஞ்சி பட்டு
குழந்தைகள் : என்ன காஞ்சி?
போட்டியாளர் : மதுரைக் காஞ்சி
குழந்தைகள் : என்ன மதுரை?
போட்டியாளர் : மா மதுரை
குழந்தைகள் : என்ன மா?
போட்டியாளர் : டீச்சர் அம்மா
குழந்தைகள் : என்ன டீச்சர்?
போட்டியாளர் : கணக்கு டீச்சர்
குழந்தைகள் : என்ன கணக்கு?
போட்டியாளர் : வீட்டு கணக்கு
குழந்தைகள் : என்ன வீடு?
போட்டியாளர் : மொட்ட வீடு
குழந்தைகள் : என்ன மொட்ட?
போட்டியாளர் : பழனி மொட்ட
குழந்தைகள் : என்ன பழனி?
போட்டியாளர் : திருப் பழனி
குழந்தைகள் : என்ன திரு?
போட்டியாளர் : விளக்குத் திரு
குழந்தைகள் : என்ன விளக்கு?
போட்டியாளர் : குத்து விளக்கு
குழந்தைகள் : என்ன குத்து?
போட்டியாளர் : கும்மாங் குத்து
கும்மாங்குத்து என்று சொன்னவுடன் அனைவரும் எல்லைக்கோட்டை தொட வேகமாக ஓட வேண்டும். முதல் போட்டியாளர் அவர்களை துரத்திச் சென்று யார் முதுகிலாவது கும்மாங்குத்து தருவார். அதன்பின் அவர் அடுத்த போட்டியாளராக மாறி விளையாட்டை தொடர்வார்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக