Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 18 ஜூலை, 2019

அறிவியல் ஆராய்ச்சியில் ஒரு நரகம்

Image result for அறிவியல் ஆராய்ச்சியில் ஒரு நரகம்


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


சூரியனை அல்லாது வேறு நட்சத்திரங்களை சுற்றும் கிரகங்கள் தான் எக்ஸோபிளான்ட் அல்லது எக்ஸ்ட்ராசோலார் பிளான்ட் (exoplanet or extrasolar planet) எனப்படும்.

1988-ஆம் ஆண்டு முதல் சுமார் 2000-க்கும் மேற்ப்பட்ட எக்ஸோபிளானட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, சமீபத்திய ஆண்டுகளில் பூமி கிரகத்தை ஒற்ற எக்ஸோபிளானட்கள் தேடல் ஆனது மிகவும் வேகமான முறையில் நடந்துக் கொண்டிருக்கிறது..!

முன்பு போல் இல்லாது, தற்போது மிகவும் சக்தி வாய்ந்த ரேடியோ மற்றும் ஆப்டிக்கல் தொலைநோக்கிகள் (radio and optical telescopes) விண்வெளி ஆராய்ச்சிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. உடன், பல விண்வெளி ஆராய்ச்சி விண்கலங்கள் (Space probes) சூரிய குடும்பத்தை தாண்டி சென்ற பின்பும் கூட நமக்கு தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறது.

அப்படியாக கண்டுப்பிடிக்கப்பட்ட – பூமி கிரகம் போன்றே இருக்கும் – எக்ஸோபிளானட்களில் அரை டஜன் கிரகங்கள் மட்டுமே அடுத்த மில்லியன் ஆண்டுகளுக்கு திரவ நீர் வழியை தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள கிரகங்கள் ஆகும்.

இதுபோன்ற தேடலின் போது பல வியத்தகு கிரகங்களும் கூட வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அப்படியாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விசித்திரம் தான் – கேன்ஸ்ரி 55 இ (Cancri 55 e).!

சமீபத்திய வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களிலேயே மிகவும் புதிரான கிரகங்களில் கேன்ஸ்ரி 55 இ கிரகமும் ஒன்றாகும். குறிப்பாக, கேன்ஸ்ரி 55 இ கிரகத்தின் வியப்பான கலவையானது (eerie composition) அதை ஒரு நரகம் போல் காட்சிப்படுத்துகிறது என்கின்றனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.

கேன்ஸ்ரி 55 இ கிரகத்திற்கு இரண்டு முகங்கள் அல்லது இரண்டு அரைக்கோளம் (two faces or hemispheres) உள்ளது. கேன்ஸ்ரி 55 இ கிரகத்தின் ஒரு ‘முகம்’ ஆனது கொதிக்கும் எரிமலைக் குழம்பால் மூடப்பட்டிருக்கிறது மற்றொரு முகமானது நிரந்திர இருளான நிலையில் (perpetual state of darkness) இருக்கிறது.

சூரியனை நோக்கி உள்ள கேன்ஸ்ரி 55 இ கிரகத்தின் பகுதியானது சுமார் 2,000 டிகிரி செல்சியஸ் உயர் வெப்பநிலையில் உள்ளது. அது மட்டுமின்றி அந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் நொடியில் உயிரைப் பறிக்கும் விஷ வாயுவான ஹைட்ரஜன் சயனைடுதனை (Hydrogen Cyanide) வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

செவ்வாய் போன்ற உயிர் வாழத் தகுதியில்லாத கிரகங்கள் பல இருப்பினும், பைபிள் விவிலிய விளக்கங்களின் படி நரகம் ஆனது இப்படித்தான் இருக்கும் என்பதை ஒற்று இருக்கிறது கேன்ஸ்ரி 55 இ..!
பூமி கிரகம் முழுக்க ஆங்காங்கே எரிமலை ஆறுகள் மற்றும் பெரிய பெரிய மாக்மா குளங்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தால் அப்படிதான் இருக்கும் கேன்ஸ்ரி 55 இ.
அது மட்டுமின்றி கேன்ஸ்ரி 55 இ, பூமி கிரகத்தை விட இரண்டு மடங்கு பெரிய அளவில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கியால் (Spitzer Space Telescope) கண்காணிப்பு நிகழ்த்தப்பட்டு, இந்த கிரகத்தில் முதல் வெப்பநிலை வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.

கேன்ஸ்ரி 55 இ கிரகம் ஆனது ஒரு குண்டு வெடிப்பு அல்லது உள்வெடிப்பு நிகழ்ந்ததற்கு சமமான அளவிற்கு வலுவான கதிர்வீச்சை வெளியிடுகிறது. வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் விண்வெளியில் இது போன்ற ஒரு விசித்திரமான மற்றும் படுபயங்கரமான ஒரு கிரகப்பொருள் இருக்கவே முடியாது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள், அதனால் தான் இதை நரகம் என்று குறிப்பிடுகின்றனர்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக