இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
உலகில் எத்தனையோ அதிசயங்களும், விநோதங்களும், மர்மங்களும் இன்றும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. இப்படி பல விநோதங்களும், மர்மங்களும் கொண்ட ஒரு அதிசய தீவைப் பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம்...
பூமியிலுள்ள தீவுகளில் இந்தியப் பெருங்கடலில் உள்ள சோகோட்ரா தீவு ஏராளமான அறிவியல் புதிர்களைத் தன்னுள் கொண்டிருக்கிறது. இந்த அதிசயத் தீவில் சுமார் 40 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள்.
கடல் மட்டத்திலிருந்து 1525 மீட்டர் உயரத்தில் மலைகள் உள்ளன. இங்கு வளரும் மரங்கள், பல்லுயிர் தாவரங்களை உலகில் வேறெங்குமே காண முடியாது.
பார்க்கும் இடமெல்லாம் வித்தியாசமான வடிவம் கொண்ட விலங்குகள், மரங்கள், பறவைகள் என இத்தீவு முழுவதும் எங்கு பார்த்தாலும் அதிசயம் கொட்டிக் கிடக்கிறது.
800-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இங்குள்ளன. இதில் 240 தாவர வகைகள் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பது இன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த அதிசய தீவில் டிராகன் மரங்கள் எனப் பெயரிடப்பட்ட மரங்கள் நிறைய உள்ளன. மரத்தில் எங்கேயாவது கீறல் ஏற்பட்டால் சிவப்பு வண்ணத்தில் திரவம் வெளிவரும்.
இத்தீவின் கடற்கரையில் பிடிபட்ட பெரிய மீன், உலகில் இதுவரை எங்கும் பார்த்திராத புதியவகை மீன்.
பாட்டில் ட்ரீ என்று அழைக்கப்படும் அடிப்பகுதி பருத்த மரங்கள், இத்தீவு முழுவதும் காணலாம்.
இப்படி பல விநோதங்களை கொண்ட இந்தத் தீவை யுனெஸ்கோ பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவித்தது.
எந்த அளவுக்கு இயற்கை வளம் இங்கே கொட்டிக் கிடக்கின்றதோ, அதே அளவுக்கு புதிர்களும் நிறைந்திருக்கின்றன. இதற்கான விடைகள் இன்றும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த அதிசயத் தீவை பற்றிய ஆய்வுகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக