Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 31 ஜூலை, 2019

பறவைகள் பலவிதம் – Part 3


sali242-1




சலீம் அலி (1896-1987)


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



இந்தியாவின் பறவை மனிதன் என்று அழைக்கப் பட்ட பெருமைக்கு உரியவர் சலீம் அலி. ஆதாரப் பூர்வமான் பறவைகளின் புள்ளி விவரத்தை பதிவு செய்த முதல் பறவையியல் விஞ்ஞானி இவர்.

சித்தப்பா அம்ருதீன் கொடுத்த துப்பாக்கியால் (“ஏர் கன்”) ஒரு குருவியை சுடுகிறான் பத்து வயது சிறுவன் சலீம் அடி பட்டு விழுந்த பறவையின் கழுத்து ஏன் மஞ்சளாக இருக்கிறது என்று கேட்க அவர் அதை பற்றி தெரியவில்லை என்று சொல்லி W.S. மில்லார்டிடம் அழைத்து சென்று அறிமுகப் படுத்தினார். சிறுவனின் ஆர்வத்தை கண்டு வியந்த அவர் பாம்பே நேச்சுரல் கிஸ்டரி சொஸைட்டியின் (BNHS) ஹானரரி செக்ரட்டரி.

பின்னாளில் உயர் கல்வியில் விலங்கியல் பாடத்தை படித்து அதே சொஸைட்டியில் வருபவர்களுக்கு ஆர்வமுடன் பறவைகளை பற்றி விளக்கி சொல்லும் வேலை (அப்போது வயது 20) நிதி பற்றா குறையை காரணம் காட்டி அந்த வேலையும் பறி போனது.

கால சூழல் அவரை கிக்கிம் கிராமத்துக்கு விரட்டியது திருமணமான சலீம் பறவைகள் நிறைந்த அந்த கிராமத்தில் பெரும்பாலான நேரத்தை பறவை ஆராச்சியிலே செலவிட்டார். பறவை ஆய்வுக்காக பல இடங்களுக்கும் பயணமானார். துக்கணாங்குருவியை பற்றிய ஆய்வு கட்டுரை (1930) அவரை பறவை யியல் நிபுணராக்கியது.

இந்தியா சுதந்திர பெற்றதன் பின்பு, 100 ஆண்டு பழமை பெற்ற BNHSநிதி நெருக்கடி காரணமாக மூடப்படும் சூழல் ஏற்பட்டது. நேருவிடம் நிதி உதவி கேட்டு பெற்று மூடப்படுவதில்இருந்து காப்பாற்றினார்.

1941 ல் “இந்திய பறவைகள்” [The Book of Indian Birds] என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அப் புத்தகம் நன்றாக விற்பனையும் ஆனது. பின்னாளில் டிலான் ரிப்ளே என்பவருடன் இணைந்து 10 வால்யூம்கள் கொண்ட புத்தகம் [Handbook of the Birds of India and Pakistan 1948 ] இந்திய பாகிஸ்தான் வாழிடப் பறவைகள் பெரிய அளவில் பேசப்பட்ட புத்தகம். இது பறவைகள் பற்றிய விரிவான தகவல் புத்தகம். வீழ்ந்த குருவி [ “The Fall of Sparrow”] பறவைகளுடனான நேசத்தை பற்றி பேசும் புத்தகம்.


himalayanforestthru1sh

சலீம் அலி பறவை ஆராய்சியாளர் மட்டுமல்ல இயற்கையின் பாது காவலர். அவருக்கு கிடைத்த இண்டர்நேசனல் பரிசுத் தொகை (Golden Ark) 5 லட்சத்தை பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டிக்கு வழங்கினார். இந்திய அரசு அவருக்கு பத்மபூசன் விருது (1983)கொடுத்து பெருமைப் படுத்தியது.
அவர் ஆரம்பித்த பறவை ஆய்வு நிறுவனம் SACON Salim Ali National Parkஇந்தியாவின் பல பகுதிகளில் செயல் பட்டு வருகின்றன [Port Blair, Mayabunder, (Andaman and Nicobar Islands); Singtam (Sikkim); Bharatpur (Rajasthan); Hyderabad (Andhra Pradesh); Upper Bhavani (The Nilgiris); Kukkal (Kodaikannal in TN) and Silent Valley National Park (Kerala)]
91ஆவது வயதில், பறவை நேசனின் உயிர் இவ்வுலகில் இருந்து பறந்து விட்டது.
* * * * * * * * * * * * * * * * *
இந்தியா சுமார் 1200 வகையான பறவை இனங்களின் தாயகமாக இருக்கின்றது. இது உலக அளவில் 12 % என்று சொல்லலாம். வட கிழக்கு இந்தியாவில் (சீன எல்லை)
கண்டறியப் பட்ட பாடும் பறவையான ஜூத்ரா சலீமலி ( “Himalayan Forest Thrush Zoothera salimalii”) 2016 ல் பறவை இனங்களில் ஒன்றாக சேர்க்கப் பட்டது. 97 வகையான பறவையினங்கள் அழிவின் நிலையில் இருப்பதாகவும், அதில் 17 வகையான பறவை இனங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனவாம். இன்னும் பாதுகாக்கப் படவேண்டியவைகளின் பட்டியல் நீள் கிறது.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக