இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஜானு என்பதற்கு 'முழங்கால்' என்று பொருள். சிரசு என்பதற்கு 'தலை' என்று பொருள் அதாவது தலையையும் முழங்கால் மூட்டையும் சேர்த்து செய்யப்படும் ஆசனம் என்பதால் இதற்கு ஜானு சிரசாசனம் என்று பெயர்.
செய்முறை:
- முதலில் கால்கள் இரண்டையும் முன்புறமாக நீட்டி நேராக அமர வேண்டும்.
- பின், வலது காலை மடக்கி இடது தொடை அருகில் வைக்கவும். அதாவது இரண்டு முழங்கால்களுக்கும் இடையே 90 டிகிரி கோண அளவு இருக்க வேண்டும்.
- மூச்சை இழுத்தபடி இரு கைகளையும் பக்கவாட்டில் இருந்து தூக்கி தலைக்கு மேல் கொண்டு செல்லவும்.
- பின்னர், மூச்சை வெளிவிட்டபடி உடலை முன்னோக்கி வளைத்து இரண்டு கைகளாலும் இடது கால் பெருவிரலை பிடிக்க முயற்சி செய்யவும்.
- நெற்றியால் இடது கால் முழங்காலை தொட முயற்சி செய்யவும்.
- இவ்வாறு செய்யும் பொழுது, இடது காலானது வளையாமல் தரையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். கால் விரல்கள் நேராக மேல்நோக்கி இருக்க வேண்டும்.
- வயிறு , மற்றும் நெஞ்சுப்பகுதி இடதுகாலை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
- சுவாசமானது இயல்பான நிலையில் இருக்கவேண்டும். இந்த நிலையில் சுமார் 30 வினாடிகள் இருக்கவும்.
- பின்னர், மெதுவாக கைகளை தலைக்கு மேலே தூக்கி நிமிர்ந்து உட்காரவும். பின் இயல்பு நிலைக்கு வரவும்.
- இதேபோன்று வலதுபுறமும் செய்யவும்.
- முழங்கால் மூட்டு, கால் தசைகளுக்கு சிறந்த பயிற்சி கிடைக்கிறது.
- கல்லீரல், சிறுநீரகம், மண்ணீரல் ஆகிய உறுப்புகள் நன்கு வலுப்பெறுகிறது.
- ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
- வயிற்றின் பக்கவாட்டு பகுதிகள் நன்கு அழுத்தப்பட்டு வலுப்பெறுகிறது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக