இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இந்த ஸ்மார்ட்போன்
எல்ஜி கே30 (2019) என்கிற பெயரின் கீழ் இதர சந்தைகளை எட்டும்.
பட்ஜெட் பிரிவின் கீழ் 2TB மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் LG
X2 (2019) அறிமுகம்!
LG நிறுவனம் அதன் X2 (2019) என்ற புதிய ஸ்மார்ட்போனை
தென் கொரியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. உடன், இந்த ஸ்மார்ட்போன் LG K 30 (2019) என்ற
பெயரின் கீழ் இதர சந்தைகளில் அறிமுகமாகும் என்பதையும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு வெளியான LG X2 ஸ்மார்ட்போனின் மேம்பபட்ட பதிப்பு தான் LG X2 (2019) ஆகும்
என்பது குறிப்பிடத்தக்கது.
எல்ஜி எக்ஸ் 2 (2019) ஆனது கடந்த ஆண்டு வெளியான
மாடலை போலவே எல்ஜியின் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக களமிறங்கி உள்ளது. இது தென் கொரியாவில்
KRW 1,98,000-க்கு (இந்திய மதிப்பின் படி தோராயமாக ரூ.11,500/-க்கு) அறிமுகமாகியுள்ளது.
அரோரா பிளாக் எனும் ஒற்றை நிறத்தின் கீழ் 2 ஜிபி அளவிலான ரேம் + 32 ஜிபி அளவிலான உள்ளடக்க
சேமிப்பு வேரியண்டில் வாங்க கிடைக்கும்.
டிஸ்பிளே மற்றும் வடிவமைப்பு:
எல்ஜி எக்ஸ் 2 (2019) ஸ்மார்ட்போனை அம்சங்களை பொறுத்தவரை, இது 720 x 1440 பிக்சல்கள்
தீர்மானம் மற்றும் 18: 9 அளவிலான திரை விகிதத்தை கொண்ட 5.45 இன்ச் எச்டி+ ஃபுல்விஷன்
டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. பாப்-அப் மற்றும் நாட்ச் போன்ற சமீபத்திய ஸ்மார்ட்போன் ட்ரெண்ட்
எதையும் ஏற்காமல், தடிமனான பெஸல்களை கொண்டுள்ளது.
ப்ராசஸர் மற்றும் மெமரி நீட்டிப்பு:
2 ஜிபி ரேம் உடனான மிகவும் பழைய 1.4GHz ஸ்னாப்டிராகன் 425 SoC கொண்டு இயங்குகிறது.
மெமரி நீட்டிப்பை பொறுத்தவரை, மைக்ரோ எஸ்டி வழியாக 2TB வரை விரிவாக்கும் ஆதரவை வழங்குகிறது.
எல்ஜி எக்ஸ் 2 (2019) ஸ்மார்ட்போனில் ஒப்பீட்டளவில் மிகவும் சிறிய 3,000 எம்ஏஎச் பேட்டரி
இடம்பெற்றுள்ளது.
கேமரா:
எல்ஜி நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் கேமராவை
வழங்குகிறது. இது Phase Detection Autofocus-ஐ ஆதரிக்கிறது. முன்பக்கத்தில், செல்பீ
மற்றும் வீடியோ சாட்களுக்கான 5 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது.
இணைப்பு விருப்பங்கள் மற்றும் இந்திய வெளியீடு:
இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4G, Wi-Fi 802.11 a/b/g/n, ப்ளூடூத் 5.0,
NFC, micro-USB போன்றவைகளை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 9.0 அடிப்படையிலான LG UX
8.0 கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் எல்ஜி கே30 (2019) எனும் பெயரின் கீழ் இந்தியாவில்
எப்போது வெளியாகும் என்பது குறித்த விவரங்கள் எதுவும் பகிரப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக